கோவையில் ஆச்சரியம்.. தாலி கட்டி முடிச்சதுமே மணமக்கள் செய்த வேலை.. வாயை பிளந்த கோயம்புத்தூர்.. சபாஷ்
கோவை: கோவையில் நிகழ்ந்த திருமணம் ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிது. இந்த புதுமண தம்பதிகளுக்கு பொதுமக்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நிகழ்வு என்பதால்தான், இந்த திருமணத்துக்கு ஏழ்மையில் உள்ளவர்களும் கடன்வாங்கியாவது கல்யாணத்தை செய்வார்கள்.
ஆடம்பர திருமணம்: வசதியில்லாதவர்களே இப்படி என்றால், வசதி படைத்தவர்களின் ஆடம்பரத்தை சொல்லவே தேவையில்லை.. வகைவகையான ஆடம்பரங்கள், தினுசுதினுசான நகைகள், பகட்டான சீர்வரிசைகள் என கண்களை பறித்துவிடும். . மணமக்கள் ஹெலிகாப்டரில் வந்திறங்குவதும், சாரட் வண்டிகளில் ஊர்வலமாக போவதும் என எத்தனையோ அமர்க்களமான திருமணங்களை நாம் கண்டுள்ளோம்..

மாட்டுவண்டிகள்: இதில் பெரிதும் ஆச்சரியங்களை கிளப்புவது மாட்டு வண்டி ஊர்வலம்தான்.. இன்னமும்கூட நம்முடைய பாரம்பரியத்தை பறைசாற்றும்வகையில், மாட்டு வண்டிகளில் சீர்வரிசைகளை வைத்து ஊர்வலம் செல்வது அதிகரித்து வருகிறது.. சில நாட்களுக்கு முன்புகூட, மதுரை உசிலம்பட்டியில் ஒரு காதணி விழா நடந்து, சுற்றுவட்டார மக்களையே ஆச்சரியத்தில் மூழ்கடித்துவிட்டது..
வழக்கமாக, மாட்டுவண்டிகளில்தான் சீர்வரிசைகளை தாய்மாமன்கள் கொண்டுசெல்வார்கள்.. ஆனால், இந்த தாய்மாமன் சற்று வித்தியாசமாக, கன்டெய்னர் லாரியில் சீர்வரிசைகளை கொண்டு வந்திருந்தார்,
புதுமண தம்பதி: இதோ இப்போதும் ஒரு புதுமண தம்பதியினர், ஒரே நாளில் கோவையை திரும்பி பார்க்க வைத்துவிட்டனர். நேற்றைய தினம் முகூர்த்த நாள் என்பதால், கோவை ஈச்சனாரி கோயிலில் பல திருமணங்கள் நேற்று நடைபெற்றன.. இதில் கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும், பௌதாரணி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.. இரு வீட்டு குடும்பத்தினரும் திரண்டு வந்து இந்த திருமணத்தை அமர்க்களப்படுத்தியிருந்தனர்.
திருமணம் முடிந்ததுமே, வித்தியாசமான முறையில் ஊர்வலம் செல்ல தம்பதிகள் முடிவு செய்தனர். ஏதாவது அலங்கரிக்கப்பட்ட வாகனம் வந்து நிற்கும் என்று அனைவருமே எதிர்பார்த்து நின்றனர். ஆனால், திடீரென மாட்டு வந்து, மண்டபத்தின் முன்பு நின்றது.. புதுமண தம்பதிகள் இந்த மாட்டு வண்டியை பார்த்துமே, குதூகலமானார்கள்.. இருவருமே மகிழ்ச்சியுடன் அதில் ஏறி உட்கார்ந்து கொண்டனரை..
மாப்பிள்ளை வீடு: மாப்பிள்ளையின் வீடு, செட்டிபாளையத்தில் இருந்ததால், ஈச்சனாரி கோயிலிலிருந்து மாட்டுவண்டியிலேயே சென்றனர். மாட்டு வண்டியில் புதுமண தம்பதியினரை பார்த்ததும, ரோட்டில் வாகனங்களில் சென்றவர்கள் எல்லாருமே ஆச்சரியமாக பார்த்தார்கள்.. இந்த வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.. இணையவாசிகளும் புதுமண தம்பதியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
வரவேற்பு: இப்போதெல்லாம் ப்ரீவெட்டிங் ஷூட்டிங், போஸ்ட் வெட்டிங் போட்டோ ஷூட், என்ற பெயரில் ஆடம்பர வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.. அதுவும், சில வெட்டிங் ஷூட்டிங்குகள் ஆபாசங்களின் உச்சக்கட்டமாகவே அமைந்துவிடுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், பாரம்பரிய முறையில் மாட்டுவண்டி, குதிரைவண்டி என மணமக்கள் ஊர்வலம் செல்ல முடிவெடுத்து வருவதற்கு வரவேற்பு பொதுமக்களிடம் கிடைத்து வருகிறது.












Click it and Unblock the Notifications