செந்தில் பாலாஜி போட்ட மெகா பிளான்.. ‘எக்ஸ்ட்ரா மார்க்’.. ஸ்டாலினுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
கோவை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கொங்கு மண்டலத்திற்கு 3 நாள் பயணமாகச் செல்லவிருக்கும் நிலையில், பொள்ளாச்சியில் ஒரு மெகா சம்பவம் அரங்கேற இருக்கிறது. திமுகவில் இணையப்போகும் மாற்றுக்கட்சியினரின் எண்ணிக்கை எதிர்க்கட்சிகளை வாய்பிளக்க வைக்கும் என்கிறார்கள் லோக்கல் திமுகவினர். அதற்கான வேலைகள் அனைத்தையும் கச்சிதமாகச் செய்து முடித்துள்ளாராம் அமைச்சர் செந்தில் பாலாஜி.
Recommended Video
கடந்த மாதமே முதல்வர் ஸ்டாலின் கோவை செல்வதாக இருந்த நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக இந்தப் பயணம் தள்ளிப்போனது. இந்நிலையில், 23ஆம் தேதி இரவு முதல் 26ஆம் தேதி வரை கொங்கு மண்டலத்தில் சுற்றப்போகிறார் ஸ்டாலின்.
அதிமுக, பாஜக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரை திமுகவில் இணைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்த செந்தில் பாலாஜி, தனக்கு கிடைத்த இந்த 'எக்ஸ்ட்ரா டைம்'-ஐ பயன்படுத்தி எக்ஸ்ட்ரா மார்க் வாங்க இருக்கிறார் என்கிறார்கள் கோவை மாவட்ட உடன்பிறப்புகள்.

கொங்கு மண்டல பயணம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 15ஆம் தேதி கோவை வருகை புரிந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, கோவை பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 23ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து விமானத்தில் கிளம்பி முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

23ஆம் தேதி இரவு
தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் 23ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து விமானத்தில் கோவை செல்கிறார். 24ஆம் தேதி காலை முதல்வர் ஸ்டாலின் கிணத்துக்கடவிற்கு செல்கிறார். அங்கு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார். சுமார் 82 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அதிரும்
அதைத் தொடர்ந்து, அன்று மாலை முதல்வர் ஸ்டாலின் பொள்ளாச்சி செல்கிறார். பொள்ளாச்சியில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் பிரமாண்ட விழா நடக்கிறது. 25-ஆம் தேதி திருப்பூரில் சிறு, குறு தொழில்நிறுவனங்களின் தொழிலுக்கு தோள்கொடுப்போம் மாநாட்டில் பங்கேற்கிறார். 26-ஆம் தேதி ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு முதல்வர் ஸ்டாலின் அன்று மாலை சென்னை திரும்புகிறார்.

முக்கிய நிர்வாகிகள்
பொள்ளாச்சியில் நடைபெறும் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்வுக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி மாநாடு போல பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளார். இந்தக் கூட்டத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த கொங்கு மண்டல முக்கிய நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைய உள்ளனர். இந்தக் கூட்டம் திமுக உடன்பிறப்புகளே வியந்து போகும் அளவுக்கு இருக்கும் என்கிறார்கள் லோக்கல் திமுகவினர்.

பிளான் இன்னும் பெருசா
கடந்த மாதம் இந்தக் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டபோது, நேரம் குறைவாக இருந்ததால், செந்தில் பாலாஜியால் திட்டமிட்ட அளவுக்கு மாற்றுக்கட்சியினரை திரட்ட முடியவில்லை எனக் கூறப்பட்டது. அந்த நேரம் பார்த்து முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பயணம் ரத்து செய்யப்பட்டதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, தனது பிளானை இன்னும் விரிவு படுத்தினார் செந்தில் பாலாஜி. ஒவ்வொரு பகுதி நிர்வாகிகளுக்கும் டார்கெட் ஃபிக்ஸ் செய்து மாற்றுக்கட்சியினரை கொண்டு வரச் செய்தார்.

தாவத் தயார்
அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் சூழ்நிலையும் திமுகவுக்கு சாதகமாக அமைய, ஈபிஎஸ் ஆதரவாளர்களான கொங்கு மண்டல முன்னாள் அமைச்சர்களால் ஓரம்கட்டப்பட்ட நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள் என பலர் திமுகவிற்கு தாவத் தயாராகியுள்ளனர். இதனால், கொங்கு மண்டல திமுக விஸ்வரூபம் எடுக்கப்போகிறது.

எக்ஸ்ட்ரா டைம்
கூடுதலாக கிடைத்த சுமார் ஒரு மாத காலப் பொழுதில், கொங்கு மண்டலத்தில், அதிமுக, பாஜகவில் குடைந்து பெரும் ஓட்டையையே போட்டுவிட்டார் செந்தில் பாலாஜி என்கிறார்கள் அப்பகுதியினர். எக்ஸ்ட்ராவாக கிடைத்த டைமை பயன்படுத்தி, எக்ஸ்ட்ராவாக உழைத்து, இப்போது ஸ்டாலினிடம் ‘எக்ஸ்ட்ரா மார்க்' வாங்கப் போகிறார் செந்தில் பாலாஜி என உடன்பிறப்புகள் உற்சாகமாகக் கூறுகிறார்கள்.

எவ்வளவு பேர்
மாற்றுக்கட்சியினர் எவ்வளவு பேர் இணைகிறார்கள் என்ற எண்ணிக்கை, அதிமுக, பாஜக தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கும் என்கிறார்கள். அதாவது, சுமார் ஐம்பதாயிரம் பேரை திரட்டியுள்ளாராம் செந்தில் பாலாஜி. இந்த எண்ணிக்கை முன்பின் இருந்தாலும், குறைந்தது 30 ஆயிரம் பேர் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், மாற்றுக்கட்சி தலைவர்களுக்கு ஷாக் மட்டுமல்ல, ஸ்டாலினுக்கே ஸ்வீட் சர்ப்ரைஸ் தான்.












Click it and Unblock the Notifications