பத்திரிகையாளர் கேட்ட கேள்வி.. கோவை பிரஸ்மீட்டில் டென்ஷனான பாஜக தலைவர் அண்ணமாலை.. வாக்குவாதம்
கோவை: கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பத்திரிகையாளர் ஒருவர் ஒரு கேள்வியை முன்வைத்தார். இதனால் முகம் மாறிய அண்ணாமலை, கேள்வி கேட்பதற்கு ஒரு மரபு இருக்கிறது. யார் இந்த மாதிரி கேள்வி கேட்கிறார்கள் என்று மக்கள் பார்க்கட்டும்.. நீங்க இங்க வாங்க... எனக்கூறினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மாநில தலைவராக இல்லை என்றால் நீங்கள் பாஜகவில் தொடர்வீர்களா என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதனால் முகம் மாறிய அண்ணாமலை, கேள்வி கேட்பதற்கு ஒரு மரபு இருக்கிறது. யார் இந்த மாதிரி கேள்வி கேட்கிறார்கள் என்று மக்கள் பார்க்கட்டும்.. நீங்க இங்க வாங்க... எனக்கூறினார்.

இதற்கு அங்கிருந்த பத்திரிகையாளர்கள் ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் கருத்து கூறினார். அப்போதும் விடாத அண்ணாமலை, இல்லை... இல்லை.. இந்த மாதிரி கேள்வி கேட்பவர்களை மக்கள் பார்க்கட்டும்.. நான் சொல்வதை கேளுங்கள்... நீங்கள் தமிழக பாஜக தலைவராக இல்லை என்றால் பாஜகவில் தொடர்வீர்களா என்று கேட்கிறீர்கள் அல்லவா... இந்த மாதிரி அறிவாளித்தனமான கேள்வியை கேட்பது யார் என்று 8 கோடி பேர் கேட்கட்டும்.
கேள்வி கேட்பதற்கு ஒரு மரபு இருக்கிறது. அந்த மரபை தாண்டிவிட்டால் அண்ணமாலை யாராக இருந்தாலும் விட மாட்டான். தயவு செய்து இங்கே வாங்க சிஸ்டர்... இதை எப்படி டிஃபெண்ட் பண்ணுவீங்க... என தொடர்ந்து பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதம் செய்தார். இதனால் பிரஸ்மீட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அரசியலை விட்டு சென்றால் நான் விவசாயம் செய்வேன் என்று நான் எங்கே சொன்னேன்..
தயவு செய்து உங்கள் காதை செக் செய்ய வேண்டும். இன்னைக்கும் நான் விவசாயம் பண்ணிக்கொண்டு இருக்கிறேன். இன்னைக்கும் எனது முதல் பணி விவசாயம். நான் அரசியல்வாதி இல்லையா.. நான் முழு நேர அரசியல்வாதியா.. கிடையவே கிடையாது. நான் எதற்கு முழு நேர அரசியல் வாதியாக இருக்க வேண்டும் ஊழல் செய்வதற்கா? விவசாயி எனது அடையாளம்.
அதற்கு அப்புறம் தான் அரசியல்வாதி என்ற அடையாளம்.. அதற்கு பிறகுதான் பாஜக என்ற அடையாளம். விவசாயி என்ற அடையாளத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். அதை எப்போது நான் விட்டு கொடுத்து இருக்கிறேன். இன்னைக்கும் விவசாயம் பண்ணிட்டுதான் நான் அரசியல்வாதியாக இருக்கிறேன். கேள்வி கேட்பதற்கு ஒரு மரபு இருக்கிறது. கேள்விகள் முறையாக இருக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
-
அண்ணாமலை! எங்கிருந்தாலும் வாழ்க..! சொன்னது நயினார் நாகேந்திரன் இல்லை! யார்னு பாருங்க! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு












Click it and Unblock the Notifications