Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை, திருப்பூர் முடங்கும் அபாயம்! தொழில்முனைவோர்களுக்கு சிக்கல்? மம்தா அறிவிப்பால் நெருக்கடி!

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூர் தற்போது புலம்பெயர் தொழிலாளர்களை நம்பிதான் இயங்கி வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தங்கள் மாநில தொழிலாளர்களை திரும்ப அழைத்துள்ளார். இதனால் கோவை, திருப்பூரில் உற்பத்தி முடங்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் ஒரு காலத்தில் கட்டுமானம், ஓட்டல் தொழில்களில் மட்டும் இருந்த வடமாநில தொழிலாளர்கள் தற்போது விவசாயம் வரை ஊடுருவி இருக்கின்றனர். டெல்டா மாவட்டங்களில் விவசாய தொழிலாளர்களாக வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டு வருவதை பார்க்க முடிகிறது.

Tamil Nadu migrant workers

வளர்ந்த தமிழ்நாடு

தமிழ்நாட்டில் கூலி அதிகம். எனவே குறைந்த கூலிக்கு வட மாநிலத்திலிருந்து ஆட்களை இறக்கி நம்மாட்கள் வேலை வாங்கி வருகின்றனர். பீகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் இங்கு வந்து வேலை செய்கின்றனர். இந்நிலையில் தங்கள் மாநில தொழிலாளர்களை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரும்ப அழைத்துள்ளார்.

மேற்கு வங்கம் திரும்ப அழைப்பு

வேலை வாய்ப்புக்காக பிற மாநிலங்களுக்கு சென்றிருக்கும் தங்கள் மாநில இளைஞர்கள் மீண்டும் சொந்த ஊர் திரும்பினால் அவர்களுக்கு ரூ.5000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும். மட்டுமல்லாது வேலை வாய்ப்புக்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார். எனவே மேற்கு வங்க புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப தயாராகி வருகின்றனர். இதனால் புலம்பெயர் தொழிலாளர்களை நம்பியிருக்கும் தொழில்முனைவோர்கள் அச்சமடைந்துள்ளனர்.

வடமாநில தொழிலாளர்களின் பலம்

தமிழ்நாட்டில் மட்டும் ஏறத்தாழ 50 லட்சம் எம்எஸ்எம்இ (சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) இருக்கின்றன. இதில் 25 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். இவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளியை விட, ஒப்பந்ததாரர்களைதான் தொழிலாளர்கள் நம்பியிருக்கின்றனர். இந்நிலையில், மம்தாவின் அறிவிப்பு காரணமாக ஒப்பந்ததாரர்கள் மீண்டும் மேற்கு வங்கம் செல்ல வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் போய்விட்டால் வடமாநில தொழிலாளர்களும் போய்விடுவார்கள். இதனால் தொழில்கள் முடங்கும் அபாயம் எழுந்திருப்பதாக தொழில்முனைவோர்கள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.

உழைப்பு சுரண்டல்

ஆனால் இந்த விஷயத்தை இன்னொரு கோணத்திலும் அணுக வேண்டும் என தொழிலாளர்கள் கூறுகின்றனர். அதாவது தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் ஒரு நாள் ஊதியம் ரூ.600ஆக இருக்கிறது. 365 நாட்களும் வேலை கிடைக்கிறது என்பதால்தான் அவர்கள் இங்கு வருகிறார்கள். ஆனால் குடும்பம், குழந்தைகள், சொந்த ஊர் இதையெல்லாம் விட்டுவிட்டு இங்கு வரும் தொழிலாளர்களை இங்குள்ள தொழில்முனைவோர்கள் அப்பட்டமாக சுரண்டுகிறார்கள்.

ஏன் வடமாநில தொழிலாளர்கள் தேவை?

அமெரிக்காவில் ஒரு இந்தியன் குறைந்த சம்பளத்தில் வேலை வாங்கப்பட்டால், அதை உழைப்பு சுரண்டல் என்று கூக்குரலிடும் தொழில்முனைவோர்கள், கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி வடமாநில தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு பணியமர்த்துகிறார்கள். இவர்கள் கொடுக்கும் கூலிக்கு தமிழ்நாட்டு மக்கள் வேலை செய்ய மாட்டார்கள். எனவேதான் வடமாநிலத்திலிருந்து தொழிலாளர்களை தொழில்முனைவோர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இப்போது வட மாநில தொழிலாளர்களுக்கு அவர்களின் சொந்த ஊரிலேயே நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கிறது என்றவுடன் உடனே தொழில்முனைவோர்கள் கலக்கமடைகிறார்கள். நியாமான ஊதியத்தை கொடுத்திருந்ததால் வடமாநில தொழிலாளி ஏன் சொந்த ஊருக்கு திரும்பி போகப்போகிறார்? என தொழிலாளர்கள் தரப்பில் கேள்விகள் எழுப்பப்படுகிறது.

தமிழகத்தில் நெருக்கடி?

இப்போதைக்கு மேற்கு வங்கம் மட்டும்தான், தங்கள் தொழிலாளர்களை திரும்ப அழைத்திருக்கிறது. அதேபோல உ.பி, பீகார், ஒடிசா மாநிலங்களும் திரும்ப அழைத்தால் நிச்சயம் தமிழ்நாட்டில் குறைந்த கூலிக்கு ஆள் கிடைக்க மாட்டார்கள். அப்போது தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். இது ஏற்படாமல் தவிர்க்க வேண்டும் எனில், சரியான கூலியை கொடுத்து பணிக்கு ஆட்களை அமர்த்த வேண்டும். மாதம் ரூ.30,000 ஊதியம் கிடைத்தால் யாரும் வேலைக்கு வர மாட்டேன் என சொல்லப்போவதில்லை. உழைப்பை சுரண்டாமல் வடமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்த தமிழக தொழில் முனைவோர்கள் தயாரா? என்பதே தற்போதைய கேள்வி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+