அவிநாசியின் ஆசை நிறைவேறப் போகுது.. 305 பில்லர்களுடன் பிரம்மாண்டம்! கோவைக்கு இனி ஜாலி தான் போங்க!
கோவை: கோவை மாவட்ட மக்களின் நீண்டகால கனவு நிறைவேறப் போகிறது. தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலம் என்ற பெயரை பெற்ற கோவை அவிநாசி மேம்பாலம் அக்டோபர் 9ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் இந்த பாலத்தை திறந்து வைக்க உள்ளதோடு, அந்த பாலத்திற்கு ஜிடி நாயுடுவின் பெயரை சூட்டுவதாக அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் அவினாசி மேம்பாலத்தின் சிறப்புகள் என்ன? அது கடந்து வந்த பாதை என்ன? என்பது குறித்து பார்க்கலாம்..
கோவை மாநகரத்தின் போக்குவரத்து முதுகெலும்பாகக் கருதப்படும் அவிநாசி சாலை, நகர வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட சுற்று மாவட்டங்களை கோவையுடன் இணைக்கும் இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயங்குகின்றன.
அதேசமயம் கல்வி நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், விமான நிலையம், பெரிய மருத்துவமனைகள் ஆகியவை அதிகமாக அமைந்துள்ளதால், இந்த சாலை வழியில் போக்குவரத்து நெரிசல் நீண்ட காலமாக மக்கள் வாழ்க்கையை சிரமப்படுத்தி வந்தது.

கோவை மேம்பாலம் திறப்பு
இதனை சமாளிப்பதற்காக, பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு, கடந்த அதிமுக ஆட்சியில் அவிநாசி சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. உப்பிலிபாளையம் முதல் கோல்ட்வின்ஸ் வரை சுமார் 10.10 கிலோமீட்டர் தூரம் வரை இந்த மேம்பாலம் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, ரூ.1,700 கோடி மதிப்பில் 2020ஆம் ஆண்டு பணிகள் தொடங்கின. தமிழ்நாட்டில் இதுவரை அமைக்கப்பட்ட மேம்பாலங்களில் நீளமானதாகும் இந்த அவிநாசி உயர்மட்ட பாலம், மொத்தம் 17.25 மீட்டர் அகலத்தில், 305 பில்லர்களுடன் கட்டப்பட்டுள்ளது.

அவிநாசி மேம்பாலம்
மேம்பாலத்தின் முக்கிய சிறப்பம்சமாக, வாகன ஓட்டிகள் எளிதாக ஏறவும் இறங்கவும் ஹோப் கல்லூரி, நவஇந்தியா, அண்ணா சிலை, கோவை விமான நிலையம் மற்றும் ரெசிடென்சி ஓட்டல் பகுதிகளில் ஏறும் மற்றும் இறங்கும் தளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் போக்குவரத்து நெரிசல் குறைந்து, கோவை நகரத்திலிருந்து விமான நிலையம் மற்றும் தொழில்துறை மையங்களுக்கு செல்லும் பயணம் எளிமையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.1791 கோடி திட்டம்
அதிமுக ஆட்சி மாறி திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னரும், இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு இருந்தது. கொரோனா பெருந்தொற்று, பொருளாதார சவால்கள் மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் பணிகள் தாமதமானபோதிலும், தற்போதைய நிலையில் ரூ.1,791 கோடி மதிப்பில் 10.1 கிலோமீட்டர் தூரம் கொண்ட உயர்மட்ட மேம்பாலம் முழுமையாக முடிவடைந்துள்ளது. மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்த மேம்பாலத்தை 5 கிலோமீட்டர் தூரம் வரை நீட்டிக்கும் புதிய திட்டத்தையும் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின்
இந்தியாவில் மிக முக்கியமான நகர வளர்ச்சி திட்டங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த அவிநாசி மேம்பாலம் நாளை மறுநாள் அக்டோபர் 9ஆம் தேதி திறந்து வைக்கப்படுகிறது. அதற்காக முதல்வர் ஸ்டாலின் கோவை வருகை புரியவிருக்கிறார். திமுகவினர் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கத் திட்டமிட்டுள்ளனர். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் முக்கியமான புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை வளர்ச்சி திட்டம்
மொத்தத்தில், கோவை அவிநாசி சாலை மேம்பாலம் திறக்கப்படுவது, நகரத்தின் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக மட்டுமல்லாமல், கோவையின் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியமான கட்டமாகும். இது, தொழில், கல்வி, சுற்றுலா மற்றும் மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறது என்கின்றனர் கோவை வாசிகள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications