அமெரிக்கா வரை பிளான்! உக்ரைன் படையில் துப்பாக்கி தூக்கிய கோவை இளைஞர்! தோண்ட தோண்ட வெளியாகும் "பூதம்"
கோயம்புத்தூர்: கோவையை சேர்ந்த சாய்நிகேஷ் ரவிசந்திரன் என்ற இளைஞர் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரை பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர வைக்கும் தகவல்கள் உளவு அமைப்பான ராவிற்கு கிடைத்துள்ளது.
Recommended Video
உக்ரைன் ரஷ்யா இடையே நடந்து வரும் போரில் உக்ரைன் படைக்கு ஆதரவாக கோவையை சேர்ந்த சாய் நிகேஷ் என்ற இளைஞர் களமிறங்கி உள்ளார். உக்ரைன் ராணுவத்தில் இணைந்து மக்கள் போர் செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து சாய் நிகேஷ் உக்ரைன் ராணுவத்தில் இணைந்தார். கடந்த 2018 ம் ஆண்டு முதல் உக்ரைனில் உள்ள கார்கோ நேசனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் விமானவியல் துறையில் படித்து வருகின்றார்.

ராணுவம் மீதும் ஆர்வம்
தற்போது 4 ம் ஆண்டு படித்து வரும் அவர் உக்ரைன் நாட்டில் உள்ள ஜார்ஜியன் நேசனல் லிஜியன் எனும் துணை இராணுவ பிரிவில் இணைந்துள்ளது. ஏற்கனவே இவர் வீட்டில் ரா பிரிவு தீவிர சோதனை நடத்தி வருவது பற்றி ஒன் இந்தியா தமிழ் சார்பாக exclusive செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தோம். இந்த நிலையில் சாய் நிகேஷ் உக்ரைன் செல்லும் முன் அமெரிக்க ராணுவத்தில் இணைய முயன்றதாக கூடுதல் தகவல் வெளியாகி இருக்கின்றன.

அமெரிக்க ராணுவம்
முதலில் இந்திய ராணுவத்தில் இணைய நிகேஷ் முயன்று இருக்கிறார். அதன்பின் உயரம் காரணமாக அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றதும் அமெரிக்க ராணுவத்தில் இணைய முடிவு செய்துள்ளார். இதற்காக உடலை ஏற்றி இருக்கிறார். அதோடு ராணுவத்திற்கு ஏற்றபடி ஹேர் கட் செய்துள்ளார். பின்னர் அமெரிக்க விசாவிற்கும் விண்ணப்பித்து அமெரிக்காவில் செட்டில் ஆகி, அங்கு குடியுரிமை பெற்று ராணுவத்தில் சேரவும் முயன்று இருக்கிறார்.

சென்னை துணை தூதரகம்
சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் மூலம் இதற்காக விண்ணப்பம் செய்துள்ளார். ராணுவம் மீதான ஆர்வம் காரணமாக அமெரிக்கா வரை செல்ல இவர் பிளான் போட்டு இருக்கிறார். ஆனால் அமெரிக்க துணை தூதரகத்தில் இவரின் விசா விண்ணப்பம் ஏற்கப்படவில்லை. இதையடுத்து ராணுவ ஆசையை கொஞ்சம் பிரேக் போட்டுவிட்டு விண்வெளி ஆராய்ச்சியில் களமிறங்கி இருக்கிறார். இதற்காக உக்ரைனில் படிக்க நிகேஷ் சென்றதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆனால் முடியவில்லை
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் கோவைக்கு வந்த நிகேஷ், உக்ரைனில் போர் தனக்கு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளதாக கூறி இருக்கிறார். அந்த பணியில் அவர் சேர வேண்டிய நிலையில்தான் உக்ரைனில் ராணுவத்தில் இணைந்துள்ளார். அதோடு உக்ரைனுக்கும் போர் மேகம் சூழ்ந்து இருந்த சமயத்தில் திரும்பி சென்று இருக்கிறார். போர் அங்கு மூளலாம் என்று தெரிந்தும் அவர் உக்ரைனுக்கு சென்று இருக்கிறார்.

படையில் இணைந்தார்
இந்த நிலையில் உக்ரைனில் ராணுவத்தில் மக்கள் சேர வேண்டும் என்று அந்நாட்டு அரசு அழைத்ததும் உடனே நிகேஷ் ஆர்வமாக சென்று உக்ரைன் படையில் சேர்ந்து உள்ளார். ஆண்கள் பலரும் வரிசையில் நின்று ஆயுதங்களை பெற்று ஒவ்வொரு பிரிவு ராணுவத்துடன் இணைந்தது போல நிகேஷும் உக்ரைன் ராணுவத்தில் இணைந்துள்ளார். இவரை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வர ரா பிரிவினர் முயன்று வருவதாக கூறப்படுகிறது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications