வில்லன்களை ஹீரோவாக காண்பிக்கும் திமுக அரசு - தேஜஸ்வி சூர்யா குற்றச்சாட்டு
கோவை: திமுக அரசு வில்லன்களை ஹீரோவாக காண்பித்து வருகிறது. வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விடுதலை செய்கின்றது. இஸ்லாமியர் வாக்குகள் வேண்டி இதை செய்கிறார்கள் என்றால் வெட்கக்கேடானது என்று பாஜக தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.
கோவை குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் பா.ஜ.க சார்பில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், தேசிய இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்கள் மற்றும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த கூட்டத்தில் தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா பேசுகையில், நம்மை அடிப்பவர்களை நாம் மறந்து விடுகிறோம். நாட்டிற்கு உள்ள ஆபத்தை நாம் உணர்வது இல்லை. கோவை மக்களை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். வெடிகுண்டு சம்பவத்துக்கு ஆண்டு தோறும் நினைவு அஞ்சலி மேற்கொண்டு வருவது பாராட்டத்தக்கது. திமுக அரசு வில்லன்களை ஹீரோவாக காண்பித்து வருகிறது.
திமுக அரசு வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விடுதலை செய்கின்றது. இஸ்லாமியர் வாக்குகள் வேண்டி இதை செய்கிறார் என்றால் வெட்கக்கேடானது. வெடிகுண்டு வெடிப்பில் உயிரிழந்த அப்பாவி மக்கள் என்ன செய்வார்கள். அல் உம்மா பாட்ஷா வெடிகுண்டு சம்பவத்திற்கு மூளையாக இருந்தவர்.
பயங்கரவாதி பாட்ஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு 5 கிலோ மீட்டர் அனுமதி கொடுத்துள்ளனர். காவலர் படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு, காவலர்கள் வைத்து சல்யூட் அடிக்க வைத்து உள்ளனர். தமிழக காவல் துறைக்கு திமுக அரசு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. திமுக அரசின் வாக்கு வங்கி அரசியல் காரணமாக தமிழ்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளது.
ஆனால், 2014 மோடியின் ஆட்சிக்குப் பிறகு வெடிகுண்டு சம்பவத்தில் பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை. திமுக மாடல் தீவிரவாதிகளை விடுதலை செய்வது தான். பாஜகவிற்கு உறுதுணையாக இருப்பது, தீவிரவாததிற்கு எதிராக இருப்பதாக அர்த்தம். 2026 ஆண்டு பாஜக ஆட்சி அமைக்கும் என்றால் தீவிரவாத சம்பந்தப்பட்ட அனைத்து இயக்கங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பதை இங்கு உறுதி அளிக்கிறேன்.
பெங்களூரில் இருந்து அடுத்த ஆண்டு ஆயிரம் காலணிகள் அண்ணாமலைக்கு கொடுக்கப்படும், அப்போது திமுக அரசு ஆட்சியில் இருக்காது என்றார்.
பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் பங்கேற்று பேசுகையில், 27 ஆண்டுகளாக எதற்கு திரும்ப திரும்ப மக்களுக்கு இதை கூற வேண்டியது ஏன் என கேட்கின்றனர். நமது சமூகத்தை பிளக்க நினைக்கும் வரலாறை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. இந்த கொடுஞ்செயல் மக்களுக்கு இன்னமும் ஆழமாக இருக்கின்றது. கோவையின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது இந்த குண்டுவெடிப்புச் சம்பவம். உயிரிழந்தவர்கள் அனைவரும் பா.ஜ.க.வினர், இந்துத்துவா அமைப்பினர் அல்ல. மத பயங்கரவாதத்திற்கு அதிக இழப்புகளை அடைந்த கட்சி பா.ஜ.க.
இந்து கலாச்சாரத்திற்கு தர்மத்திற்கு பாதிப்பு வந்தால் அதை காக்க நாங்கள் இருக்கின்றோம். இதை ஒவ்வொரு தலைமுறைக்கும் எடுத்துக் செல்லாமல் இருக்க மாட்டோம். பொங்கல் வைக்காத இஸ்லாமியர், கிறிஸ்தவர்களை வைத்து ஏமாற்றும் முதல்வர் இங்கு இருக்கின்றார். தமிழகத்தில் பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் விழாக்களுக்கு வாழ்த்து சொல்லாதவர் முதல்வர் என்று தெரிவித்தார்.
-
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்!












Click it and Unblock the Notifications