அடித்து நொறுக்கப்பட்ட தந்தை பெரியார் உணவகம்.. இன்று அதே இடத்தில் அதே பெயரில் மீண்டும் திறப்பு
கோவை: கோவை காரமடை அருகே கண்ணார்பாளையத்தில் இந்து முன்னணி அமைப்பினரால் தாக்கப்பட்ட தந்தை பெரியார் உணவகம் இன்றைய தினம் அவரின் பிறந்தநாளன்று கோலாகலமாக மீண்டும் திறக்கப்படுகிறது.
கண்ணார்பாளையம் நால் ரோட்டில் பிரபாகரன் என்பவர் தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் ஹோட்டலை கடந்த 13 ஆம் தேதி திறந்தார். இந்த திறப்பு விழாவின் போது கடையின் உள்ளே புகுந்த மர்ம கும்பல் பிரபாகரனுடன் வாக்குவாதம் செய்தனர்.
அப்போது பிரபாகரனை தகாத வார்த்தைகளாலும் பேசியதாத தெரிகிறது. இதையடுத்து அந்த கும்பல் ஹோட்டலையும் அடித்து நொறுக்கியது. இதை தடுத்த கடை உரிமையாளர் பிரபாகரனை கடுமையாக தாக்கி கடை ஊழியர் அருண் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது.

தாக்குதல்
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அருணுக்கு 36 தையல்கள் போடப்பட்டன. இதையடுத்து இந்த தாக்குதல் சம்பவம் குறித்து காரமடை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது போல் பெரியார் உணவகத்தை தாக்கியவர்கள் மீதும் உரிமையாளர், ஊழியர் மீது கடுமையாக தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

6 பேர் கைது
இந்த நிலையில்தான் தாக்குதலில் ஈடுபட்ட ரவிபாரதி சரவணகுமார், சுனில், பிரபு, மற்றொரு பிரபாகரன், விஜயகுமார் ஆகிய 6 பேரை காரமடை போலீஸார் கைது செய்தனர். அப்போதுதான் அவர்கள் 6 பேரும் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. கைதானவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பெரியார் பெயரில் ஹோட்டல்
பெரியார் பெயரில் ஹோட்டல் திறந்ததால் அதை இந்து முன்னணியினர் கடுமையாக தாக்குதல் நடத்தியது குறித்து கடை உரிமையாளர் பிரபாகரன் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் பெரியார் பெயரில் திறந்த கடையை அடித்து உடைத்ததால் நான் துவள மாட்டேன். அதே இடத்தில் மீண்டும் கடையை திறப்பேன். அதுவும் செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பிறந்தநாளன்று என தெரிவித்திருந்தார்.

கடை திறப்பு விழா
இந்த நிலையில் அவர் சொன்னது போல் கடை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை அடித்துள்ளார். கோவை காரமடை நால்ரோட்டில் தந்தை பெரியார் உணவகம் இன்றைய தினம் மதியம் 12 மணிக்கு திறக்கப்படுகிறது. இந்த திறப்பு விழாவுக்கு பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை கு ராமகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார்.

கடையை திறப்பது யார்
அது போல் கடையை திறந்து வைப்பவர் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன். திமுக மாவட்டச் செயலாளர் ராமசந்திரன் வாழ்த்துரை வழங்குகிறார். மேலும் திராவிடர் பண்பாட்டுக் கூட்டியக்க அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் திமுக நகர ஒன்றியப் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

பெரியார் மொழிகள்
அழைப்பிதழின் இடது கோடியில் நாட்டில் ஒற்றுமையும் அமைதியும் முன்னேற்றமும் ஏற்பட வேண்டுமெனில் சாதி வெறியும் மத வெறியும் ஒழிக்கப்பட்டு சமத்துவமும் சமூகநீதியும் உண்டாக்கப்பட வேண்டும் என்ற பெரியாரின் பொன்மொழிகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இத்தனை பிரச்சினை வந்த போதிலும் துவளாமல் கடையை திறக்கும் பிரபாகரனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
-
கோவை சிறுமி விவகாரம்! வாழறதுக்கே தகுதி இல்லாதவர்கள்! எம்.எஸ்.பாஸ்கர் கொந்தளிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications