சிதறி கிடந்த 10 குண்டுகள்.. பாஜக பிரமுகர் வீட்டில் துப்பாக்கி சூடு.. கோவையில் பரபரப்பு..!
கோவையில் பாஜக பிரமுகர் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது
கோவை: கோவை பாஜக நிர்வாகி வீட்டில் துப்பாக்கி சூடு நடந்ததாக கூறப்பட்ட தகவலால் பரபரப்பு ஏற்பட்டது... மேலும், சிறிய வகை துப்பாக்கி தோட்டாக்கள் வீட்டின் அருகே கிடந்ததால் அந்த பகுதி மக்களிடையே பதற்றம் தொற்றி கொண்டது.
கோவை மாவட்டம் குனியமுத்தூர் அடுத்த சுண்டக்காமுத்தூர் விசாலாட்சி நகர் பகுதியைச் சேர்ந்த வரதராஜ் என்பவரின் மகன் ஜெகதீஷ். 43 வயதாகிறது.. இவர் பாஜக பிரமுகர்.. அக்கட்சியின் குனியமுத்தூர் மண்டல பொதுச்செயலாளராக உள்ளார்.
மனைவி பெயர் பூங்கொடி. 2 குழந்தைகள் உள்ளனர்... ஜெகதீஷ் மணல் வியாபாரம் உள்பட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார்.

தீபாவளி
தீபாவளி பண்டிகைக்காக குடும்பத்துடன் அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டு நேற்றிரவு வீடு திரும்பி உள்ளார்.. அப்போது, வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.. இது தொடர்பாக குனியமுத்தூர் பேரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பார்வையிட்டனர்... வீட்டின் சுவற்றில் பல இடங்களில் ஓட்டை விழுந்திருப்பதும் தெரியவந்தது. அதுமட்டுமல்ல, வீட்டிற்குள் விலங்குகளை சுட பயன்படுத்தும் ஏர்கன்னிலிருந்து சுடப்பாட்ட துப்பாக்கி குண்டுகளும் சிதறி கிடந்தன..

மின் கம்பம்
மொத்தம் 10 குண்டுகள் இருந்தன.. அவைகளை போலீசார் கைப்பற்றினர். பிறகு அந்த பகுதியில் சோதனை செய்ததில் சிறிய வகை துப்பாக்கி தோட்டாக்கள் வீட்டின் அருகே கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது... அதுகுறித்து விசாரணை செய்ததில், தீபாவளியை கொண்டாட அருகேயுள்ள வீட்டின் முன்பு உள்ள மின் கம்பகத்தில் பலூன்களை கட்டிவைத்து ரைபிள் துப்பாக்கியால் சுட்டு விளையாடியுள்ளனர். இதில் குறி தவறி துப்பாக்கி குண்டுகள் ஜெகதீசன் வீட்டின் ஜன்னல் கதவில் பட்டு உடைந்தது தெரியவந்தது. இது தொடர்பாக பேரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை
ரைபிள் வகை, துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது... இந்த துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடக்கிறது.. ஜன்னல், சுவர்கள் சேதமடைந்துள்ளன.. வீட்டிற்குள் ஆள் இல்லாததால் ஜன்னலை துளைத்த குண்டால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்து மகா சபை
அதேபோல, கோவை அருகே இந்து மகாசபா நிர்வாகி கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.. துடியலூர் அருகே உள்ள பன்னிமடையை சேர்ந்தவர் சுபாஷ், அகிலபாரத இந்து மகாசபாவில் மாநில இளைஞர் அணி செயலாளராக உள்ளார்... சம்பவத்தன்று இவர் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தபோது, இரவு 11 மணியளவில் மர்மநபர்கள், சுபாஷ் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த கார் மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு சென்றுள்ளனர்.. இதனார் கார் தீப்பிடித்து கருகுகிறது..

ஹெல்மெட்
இதுகுறித்து தடாகம் போலீசாருக்கு சுபாஷ் தகவல் அளிக்கவும், அவர்கள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்... அப்போது வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஹெல்மெட் அணிந்து நடந்து வரும் 2 மர்மநபர்கள் கார் மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது... அவர்கள் யார் என்று தெரியவில்லை.. அவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
-
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி












Click it and Unblock the Notifications