பறக்கும் போதே கிளம்பிய கரும்புகை! விமான பயணிகளின் திக்திக் நொடிகள்! கலங்கிய கோவை! என்ன காரணம்?
கோவை : கோவை விமான நிலையத்தில் விமானம் ஒன்று கரும்புகையுடன் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், விமான பயணிகளிடையே பீதி ஏற்பட்டதோடு, பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
கோவை விமான நிலைத்திற்கு தினந்தோறும் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்று காலை கோ ஏர்-43 என்ற விமானம் ஒன்று பெங்களூரில் இருந்து 92 பயணிகளுடன் மாலி நாடு நோக்கி சென்று கொண்டிருந்தது.

கரும்புகை
அப்போது அந்த விமானத்தில் இருந்து திடீரென கரும்புகை எழுந்தது. இதனால் விமானத்தில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். விமானம் கோவை சுற்றுவட்டாரப்பகுதிக்குள் பறந்து கொண்டிருந்ததால் இங்கிருந்த விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவசர தரையிறக்கம்
தொடர்ந்து அந்த விமானம் கோவை விமான நிலையத்தில் மதியம் 12.57 மணியளவில் அவசரமாக தரையிரக்கப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. விமானத்தில் இருந்து கரும்புகை வந்தது எப்படி...? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பரிசோதனை
இதனை தொடர்ந்து இரட்டை இஞ்சின் கொண்ட அந்த விமானம் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அலாரம் பழுது அடைந்ததன் காரணமாக அலாரம் அடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விமானத்தில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அசம்பாவிதம் இல்லை
இதனை தொடர்ந்து விமானம் மாலை 5 மணியளவில் புறப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் விமானத்தில் பயனம் செய்த 92 பயணிகளுக்கு எவ்வித அசம்பாவிதமும் நேரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே விமானங்கள் ஏதாவது ஒரு பிரச்சினையாவது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications