பல நாள் பிரச்சனைக்கு விடிவு பிறந்தது.. ரேஷன் கடைக்கு போறீங்களா.. இனி புன்னகைக்கு கேரண்டி
கோவை: ரேஷன் கடைகளில் அடிக்கடி சர்வர் பிரச்சினை ஏற்படுவதால் பொதுமக்களுக்கு உடனடியாக பொருட்கள் வழங்க முடியாத நிலை இருந்தது. இதற்கு தீர்வளிக்கும் வகையில், 2 சிம்கார்டுகள், 4 ஜி வசதியுடன் ரேஷன் கடை ஊழியர்களுக்கு புதிய கருவி வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள பல ஆயிரம் ரேஷன் கடைகள் மூலம் கோடிக்கணக்கு விலையில்லா அரிசி மற்றும் மானிய விலையில் பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் உள்ள பெரிய பிரச்சனை என்னவென்றால்,அங்குள்ள நெட்வொர்க் பிரச்சனை தான்.

ரேஷன் கடைகளில் முறைகேட்டை தடுக்க கைரேகை வைத்தே பொருட்களை வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரேஷன் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களின் ஸ்மார்ட் கார்டுகளை ஸ்கேன் செய்து கைவிரல் ரேகைகளை பதிவு செய்ய பி.ஓ.எஸ். என்ற கருவி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கருவி 2 ஜி நெட் ஒர்க் வசதியில்தான் இத்தனை நாட்களாக செயல்பட்டு வந்தது.
இதன் காரணமாக ரேஷன் கடைகளில் அடிக்கடி சர்வர் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. கடைக்கு வரும் பொதுமக்களுக்கு உடனடியாக பொருட்கள் வழங்க முடியாதநிலை இருந்து. கடைகளின் முன்பு எப்போது கூட்டம் அலைமோதும் நிலை இருக்க சர்வர் பிரச்சனையும் ஒருகாரணமாக இருக்கிறது. இதனால் ஒரு சில ரேஷன் கடைகளில், அங்கு வேலை செய்து வரும் ஊழியர்கள், தங்கள் செல்போன்களில் இருந்து இந்த கருவிக்கு நெட்ஒர்க் கொடுத்து பயன்படுத்தும் நிலை இருக்கிறது.
எனவே அதிவேக நெட்ஒர்க் வசதியுடன் கூடிய கருவி வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் வலியுறுத்தி வந்தார்கள். இநநிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் புதிய கருவி வழங்க முடிவு செய்யப்பட்டது. கோவை மாவட்டத்தில் 1,145 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் 11 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு விலையில்லா அரிசி மற்றும் மானிய விலையில் பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கோவை வட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சென்னையில் இருந்து 2 சிம்கார்டுகள், 4 ஜி நெட்ஒர்க் வசதியுடன் கூடிய புதிய கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டன.
அந்த கருவிகளை ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று கோவை மாவட்டத்தில் நேற்று கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, பேரூர், சூலூர், காரமடை, பொள்ளாச்சி ஆகிய 5 பகுதிகளில் நடந்தது. இதில் ரேஷன் கடை ஊழியர்கள் கலந்து கொண்டு புதிய கருவிகளை வாங்கி அவற்றை சோதனை செய்து பார்த்தார்கள். அத்துடன் அந்த கருவிகளை உபயோகிப்பது குறித்து அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நேற்று 2 சிம்கார்டுகள், 4 ஜி நெட்ஒர்க் வசதியுடன் கூடிய புதிய கருவி வழங்கப்பட்டிருப்பதால், எந்த சிம்கார்டில் அதிவேக நெட்ஒர்க் இருக்கிறதோ அதை இந்த கருவி தானாகவே இனி எடுத்துக் கொள்ளும். இதன் காரணமாக ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்யும்போது சர்வர் பிரச்சினை ஏதும் ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதுபோன்று வயதான சிலருக்கு கைவிரல் பதிவு செய்ய முடியாது. அவர்களின் கருவிழியை பதிவு செய்யவும் கருவி வழங்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் பொதுமக்கள் என்னென்ன பொருட்கள் வாங்கி இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள பிரிண்ட் வசதியும் வழங்கப்பட்டிருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications