தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும்.. மத்திய அரசு செய்வது சதி.. ப சிதம்பரம்
கோவை: காங்கிரஸ், திமுக,தோழமை கட்சிகளை சேர்ந்த 39 பேரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன். கடைசி 5 நாட்கள் தேர்தல் விலை தீவிரமாக நடக்கும். இந்த நேரத்தில் பிரச்சாரத்தை முடக்க நாடாளுமன்றத்தை கூட்டுகின்றனர். இது திட்டமிட்ட சதி. 67 உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத நாடாளுமன்றத்தை கூட்டுவதன் அவசியம் என்ன? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
கோவை தனியார் ஹோட்டலில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசியவர் கூறுகையில், "நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுவதை எதிர்க்கின்றோம்.நான் இன்னும் வரைவு சட்டத்தை பார்க்கவில்லை. ஆனால் ஒரே மாதிரியான செய்தி எல்லா பத்திரிகையிலும் ஒரே மாதிரி வந்திருக்கின்றது.
மக்களவை எண்ணிக்கையை அதிகரித்து பின் மறு சீரமைப்பு என சொல்வது மாயை. Delimitation என்றால் உடனடியாக தெரிந்து விடும். 39 தொகுதி என்பது 32 ஆக குறையும். ஆனால் 50 சதவீத எண்ணிக்கையை உயர்த்தி, பின்னர் 58 தொகுதி 46 ஆக குறையும். உத்திரபிரதேசத்தில் 80 மக்களைவை தொகுதி 120 தொகுதியாக உயரும். டிலீமிட்டேசனுக்கு பின்பு 140 ஆக அங்கு உயரும். இது தென் மாநிலங்களை மிக மிக பாதிக்கும்.
24.3 சதவீதம் உறுப்பினர்கள் தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள். இது 20.7 சதவீதமாக நாடாளுமன்ற வாக்கு சதவீதம் குறையும். தென் மாநிலங்களின் குரல் அழுத்தப்படும். பெண்கள் ஒதுக்கீடு என்பதை ஆதரிக்கிறோம். இதை கொண்டு வந்ததே காங்கிரஸ் கட்சிதான். 543 ல் உடனடயாக 3 ல் ஒரு பங்கு உயர்த்த வேண்டும் என 2024 நாடாளுமன்ற தேர்தலில் வலியுறுத்தினோம்.
2029 தேர்தலில் நறைவேற்றுவோம் என சொல்கின்றனர். ஏப்ரல் 29 ம் தேதி இந்த கூட்டத்தை கூட்டலாமே.. நாடாளுமன்ற கூட்டத்தை 13 நாட்கள் பின்னர் கூட்டப்போடுவதால் என்ன பிரச்சினை. மேற்குவங்கம், தமிழ்நாட்டைச் சேர்ந்த 67 எம். பி கள் இதில் கலந்து கொள்ள கூடாது என நினைக்கின்றனர்.
காங்கிரஸ், திமுக,தோழமை கட்சிகளை சேர்ந்த 39 பேரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன். கடைசி 5 நாட்கள் தேர்தல் விலை தீவிரமாக நடக்கும். இந்த நேரத்தில் பிரச்சாரத்தை முடக்க நாடாளுமன்றத்தை கூட்டுகின்றனர். இது திட்டமிட்ட சதி. 67 உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத நாடாளுமன்றத்தை கூட்டுவதன் அவசியம் என்ன?
இதற்கு எடப்பாடி பழனிச்சாமி என்ன பாதகம் ஏற்படும், பாதகம் ஏற்படாது என்று சொல்ல வேண்டும் . எடப்பாடி பழனிச்சாமி பதில் எனக்கு அதிர்ச்சியை தருகின்றது. அமித்ஷாவை கேட்டேன். அவர் பாதகம் வராது என்று சொன்னார். அதனால் பாதகம் வராது என்கின்றார். அமித்ஷாவின் பதிலை ரிலே பண்ணுவதற்கு இவர் ஒலிபெருக்கியா? அமித்ஷாவின் பதிலை சொல்கின்றார். இது ஒரு கட்சி தலைவருக்கு அழகா? இதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பா.ஜ.க சூழலுக்கு ஏற்ப நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்வார்கள்.
பீகாரில் நிதிஷ் குமார் எத்தனை நாட்களுக்கு முதல்வராக இருப்பார் என ஆரம்பத்தில் கேட்டேன். நேற்று பா.ஜ.க முதல்வர் பொறுப்பு ஏற்று விட்டார். எடப்பாடி பழனிச்சாமி ஆசை நிராசை ஆகப்போகின்றது. அவர் முதல்வராக முடியாது. விபத்தில் அவர் முதல்வராக வந்தாலும், பிற மாநிலங்களை போல இங்கும் நடக்கும். 39 மக்களவை தொகுதியினை 58 ஆக மாற்றி பின்னர் டிலிமிட்டேசனில் 46ஆக குறைப்பார்கள். அவ்வளவு ஏமாளிகளா தமிழக மக்கள்?
பா.ஜ.க நேரடியாகவே இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கின்றது. மேற்கு ஆசியா போர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவில்லை. பேசாத பார்லிமென்ட் என்ன பார்லிமென்ட். நாள் தோறும் ஒத்தி வைப்பு தீர்மானம். போர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவில்லை. இந்தியாவின் முன்னாள் தூதர்கள் சாய்சரண், சிவ சங்கர் மேனன் போன்றவர்கள் இந்தியாவின் வெளியுறவு கொள்கை சரிந்து விட்டது என கட்டுரைகள் எழுதி இருக்கின்றனர். ராகுல்காந்தி தமிழகத்தில் இரு தினங்கள் பிரச்சாரம் மேற்கொள்வதாக தகவல்கள் இருக்கின்றது. நாடாளுமன்றத்தில் முழு பலம் இருந்தால் இந்த அரசியல் திருத்த மசோதா தோற்கடிக்கபடும்.
அரசியல் விபத்து நடந்து எடப்பாடி முதல்வரானால் பீகாரை போல் நடக்கும். காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் பிரச்சாரம் செய்யவில்லையே என்ற கேள்விக்கு, திமுக தேர்தல் பரப்புரை செய்ய என்னை கேட்டார்கள். அதனால் அவர்களது தொகுதியில் பிரச்சாரம் செய்கின்றேன் என ப.சிதம்பரம் தெரிவித்தார்.
-
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
உத்தரப் பிரதேசம் vs தமிழ்நாடு! லோக்சபா தொகுதி மறுவரையறையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? ஷாக் தகவல்! -
பெரும் தலைகளையே ‘போட்டுப் பார்த்த’ வாக்காளர்கள்.. காமராஜர், அண்ணாவை தோற்கடித்த தேர்தல் வரலாறு! -
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
சென்னையில் கொளுத்தப்போகும் வெயில்.. இன்றும் நாளையும் 100 டிகிரியை தாண்டும்! உஷார் மக்களே! -
வங்கிகளில் தங்க நகையை அடகு வைத்தவர் தவிர வேறு நபர் மீட்க முடியுமா? விதிமுறைகள் சொல்வது இதுதான்! -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
ஒரு பக்கம் Delimitation.. இன்னொருபுறம் அண்ணா சிலைக்கு மாலை! நாகர்கோவில் மோடி சம்பவம் -
ஒடுக்கப்படும் தென்னிந்தியாவின் குரல்? 850ஆக உயரும் லோக்சபா தொகுதிகள்.. வடமாநிலங்களின் மெகா ஆதிக்கம் -
ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை.. நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் குறித்த கேள்விக்கு எடப்பாடி ரியாக்ஷன் -
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள்












Click it and Unblock the Notifications