கோவை தெற்கு தொகுதியில் தாமரை மலரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. வானதி சீனிவாசன் பேட்டி
கோவை: கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், டாடாபாத் பகுதியில் உள்ள காமராசர் மெட்ரிகுலேசன் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை தெற்கு தொகுதியில் தாமரை மலரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார்.
Recommended Video
கோவை தெற்கு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.
இதனிடையே தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

வானதி சீனிவாசன்
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், டாடாபாத் பகுதியில் உள்ள காமராசர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிக்கு வாக்களித்த வந்தார். வரிசையில் நின்று வானதி சீனிவாசன் வாக்களித்தார்.

வாக்களிப்பது அவசியம்
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஜனநாயகத்தில் வாக்களிப்பது தலையாய கடமை எனத் தெரிவித்தார். மக்கள் பணியில் சமரசம் செய்யாதவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும், வருங்கால தலைமுறை மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு வாக்களிப்பது முக்கியம் என்பதை உணர்ந்து மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

கோவை தெற்கு
கோவை தெற்கு தொகுதியில் தாமரை மலரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியில் உள்ள கமல்ஹாசன் சென்னையில் தனது வாக்கை செலுத்திய நிலையில் தற்போது கோவை வந்துள்ளார். அவர் வாக்குப்பதிவு நடைபெறுவதை ஆய்வு செய்து வருகிறார்.

சாலை மறியல்
இதனிடையே கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் டோக்கன் கொடுத்து பணம் விநியோகம் செய்வதாக குற்றம் சாட்டி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் தனது ஆதரவாளர்களோடு சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது. புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி தெரிவித்துள்ளனர்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications