பொள்ளாச்சி பலாத்கார வழக்கில் அரசியல் தொடர்பு இல்லை.. கைதானவர்கள் மீது குண்டர் சட்டம்.. எஸ்பி பேட்டி
Recommended Video

கோவை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் அரசியல் தொடர்பு இல்லை என்று கோவை மாவட்ட எஸ்பி பாண்டியராஜன் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் பொள்ளாச்சியை சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் அளித்த ஒரு புகார் தமிழகத்தையே குலுக்கியது. சில இளைஞர்கள் பாலியல் வன்முறை செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டி வருகிறார்கள் என்று புகார் அளித்து இருந்தார்.

இதையடுத்து பொள்ளாச்சி போலீஸ் தனிப்படை அமைத்து இதுகுறித்து விசாரித்தது.
இந்த தனிப்படை விசாரணையில் சபரி, வசந்த குமார், சதீஷ் குமார், திருநாவுக்கரசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட, வழக்கு குறித்து கோவை மாவட்ட எஸ்பி பாண்டியராஜன், விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: கைது செய்யப்பட்ட 4 குற்றவாளிகள் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அரசியல் கட்சியினர் தொடர்பு எதுவும் கிடையாது. முதற்கட்ட விசாரணையில் குற்றவாளிகள் அவனிடமிருந்து தேவையான தகவல்கள் கிடைத்துள்ளன. தேவைப்பட்டால் குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குற்றவாளிகளிடம் கைப்பற்றப்பட்ட செல்போன்களில், 4 வீடியோக்கள் மட்டுமே இருந்தன. வீடியோவில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு வாக்குமூலம் பெற, நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு கோவை எஸ்.பி. பாண்டியராஜன் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications