ஜக்கி வாசுதேவுக்கு எதிராக கோவை விமான நிலையத்தில் கருப்பு கொடி போராட்டம்
கோவை: கோவை ஈஷா யோக மையத்தின் நிறுவனரான ஜக்கி வாசுதேவ் இன்று அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் கோவை திரும்பிய நிலையல், ஜக்கி வாசுதேவை கண்டித்து அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலின் அருகில் அமைந்துள்ளது ஈஷா யோக மையம். கோவையின் அடையாளங்களில் ஒன்றாக மாறிப்போன இந்த ஈஷா யோக மையத்திற்கு, உள்ளூர் மட்டுமன்றி வெளிமாவட்டங்கள், மாநிலங்களைச் சேர்ந்தோரும் அதிக அளவில் வந்து செல்வது வழக்கம்.

இங்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவால் வடிவமைக்கப்பட்டு, கடந்த 2017 ஆம் ஆண்டு ஆதியோகி சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி இந்த ஆதியோகி சிவன் சிலையைத் திறந்து வைத்தார். ஆதியோகியை காண தமிழகம் மட்டுமின்றி நாட்டின் அனைத்து பகுதியில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர்.
இந்த யோகா மையத்தில் யோகா பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. மஹா சிவராத்திரி அன்று பிரமாண்டமான நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியைக் காண்பதற்காக உலகம் முழுவதும் இருந்தும் சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என ஆயிரக்கணக்கானோர் ஆதியோகியை தரிசிக்க வருகை தருவர்.
இதனிடையே ஈஷா யோக மையம் தொடர்பான பல்வேறு புகார்கள் முன்வைக்கப்படுவதும், அதை ஈஷா மறுப்பதும் நடந்து வருகிறது. இதுவரை எந்த புகாருக்கு எதிராகவும் நீதிமன்றங்களில் தண்டனை பெறவில்லை. ஆதாரமே இல்லாமல் காழ்ப்புணர்ச்சியால் புகார்கள் அடுக்கப்படுவதாக ஈஷா தரப்பு குற்றம்சாட்டி வருகிறார்கள்.
இந்நிலையில், ஈஷா யோக மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவை கண்டித்து அனைத்து முற்போக்கு இயக்கத்தினர் கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பீளமேடு விமான நிலையம் இணைப்பு சாலை அருகே கையில் கருப்புக் கொடிகளுடன் போராட்டம் நடைபெற்றது. தபெதிக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் கருப்பு கொடிகளுடன் பங்கேற்றனர்.
ஈஷா கோவையின் மர்மதேசம். ஈஷா மீதான புகார்களை விசாரிக்க வேண்டும். ஈஷா மையத்தை மூட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈஷா யோக மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவுக்கு எதிராகவும், ஈஷா யோகா மையத்திற்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
சமூக மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களும் பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களும் ஜக்கி வாசுதேவுக்கு எதிராக கடுமையான முழக்கங்களை எழுப்பினர். ஜக்கியை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றும் வரை ஓய மாட்டோம் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து, காவல் துறையினர் அவர்களையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
ஜக்கி வாசுதேவைக் கண்டித்து நடத்தப்பட்ட இப்போராட்டங்கள் காரணமாக, விமான நிலையத்தில் இருந்து காளப்பட்டி செல்லும் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications