ட்விஸ்ட்.. பாழடைந்த பங்களாவில் நுழைந்த 3 பேர்.. அடுத்தடுத்து பயங்கரம்.. வழக்கில் திடீர் திருப்பம்
சயனைடு கலந்து 3 பேர் கோவையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்
கோவை: கோவையில் தீபாவளியன்று விடிய விடிய மதுகுடித்த 3 பேர் உயிரிழந்ததற்கு, சயனைடு கலந்த மது குடித்ததே காரணம் என்று தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைதாகி உள்ளார்.
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்திபன்(31) , சக்திவேல் (60), முருகானந்தம் (55) ஆகியோர்.
இதில் பார்த்திபன், சக்திவேல் 2 பேரும் நண்பர்கள்.. 2 பேருமே பெயிண்ட்டர்கள்.. முருகானந்தம் சமையல் பணி செய்பவர்... அந்த வகையில் கோவைக்கு செல்லும்போது, இவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது..

தீபாவளி
அப்போது முதலே 3 பேருமாக சேர்ந்தே மது அருந்தி வந்துள்ளனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகை அன்றும் மது அருந்த முடிவு செய்தனர்.. விடிந்தால் தீபாவளி என்பதால், மது வாங்கி கொண்டு பட்டத்தரசிய்யம்மன் கோவில் அருகே உள்ள ஒரு , பாழடைந்த கட்டிடத்திற்கு சென்று விட்டனர்.. அங்கு உட்கார்ந்து தண்ணி அடித்தால் யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்பதால், அதற்குள் 3 பேருமே நுழைந்தனர். விடிய விடிய தண்ணி அடித்தனர்.. பொழுது விடிந்ததும், 3 பேருமே வீட்டுக்கு கிளம்ப அந்த கட்டிடத்தை விட்டு வெளியே வந்தனர்.

பரிசோதனை
இதில், சக்திவேல் மட்டும் போதை அதிகமாகிவிட்டு அவரால் நடக்க கூட முடியவில்லை.. அதனால் கட்டிடத்துக்கு பின்பக்கம் அப்படியே உட்கார்ந்தவர், சிறிது நேரத்தில் இறந்துவிட்டார்.. இதேபோல, பாரதியார் சாலையில் சென்று கொண்டிருந்த முருகானந்தமும், நடுரோட்டிலேயே விழுந்து இறந்துவிட்டார். இந்த தகவல் போலீசுக்கு பறந்த நிலையில், அவர்கள் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கள்ளச்சாராயம்
அப்போதுதான், பார்த்திபனும் அவர் வீட்டருகே சடலமாக கிடப்பதை பார்த்து, அவரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. 3 பேருமே மது அருந்திதான், இறந்தனரா? அந்த மதுவை எந்த கடையில் வாங்கினர்? ஒருவேளை அது கள்ளச்சாராயமா? அல்லது குடும்ப பிரச்சனையால் 3 பேருமே தற்கொலை செய்து கொண்டார்களா என்ற பலவித கோணங்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையை கையில் எடுத்தனர். இவர்களின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான், முழு உண்மையும் தெரியவரும் என்றும் நம்பப்பட்டது.

திடீர் திருப்பம்
இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது... விடிய விடிய மதுகுடித்த 3 பேர் உயிரிழந்ததற்கு சயனைடு கலந்த மது குடித்ததே காரணம் என தெரியவந்துள்ளது... முன்பகை காரணமாக மதுவில் சயனைடு கலந்து கொடுத்து 3 பேருமே கொல்லப்பட்டுள்ளனர்.. இது தொடர்பாக ராஜசேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், இவர் யார்? இவர்களுக்குள் என்ன முன்பகை என்று தெரியவில்லை.. போலீசார் ராஜசேகரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications