திருப்பூர் தோட்டத்தில் நுழைந்த கள்ளக்காதலன்.. 3வது முறையாக, மனைவியை அபகரித்த தாராபுரம் முனியாண்டி

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: கடலூர் மாவட்டத்தை சேர்ந்த நபர், ஒருவர் தன்னுடைய மனைவியை ஊர் ஊராக மனைவியை அழைத்து சென்றும், பின்னாடியே விரட்டி வந்திருக்கிறார் முனியாண்டி.. கடைசியில் திருப்பூர் மாவட்டத்தில் முனியாண்டிக்கு வந்த நிலைமையை பார்த்தீங்களா?

கோவை கருமத்தம்பட்டி அருகே 3வது முறையாக மனைவியை அபகரிக்க முயன்ற கள்ளக்காதலனை கணவர் குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tiruppur dharapuram

கடலூர்: கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகவேல்.. 56 வயதாகிறது. இவரது மனைவி தேவிக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 45 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன்புதான், கருமத்தம்பட்டி அருகே உள்ள வடுகன்காளிபாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில், இவர்கள் 3 பேருமே தங்கியிருந்து வருகிறார்கள்.

முன்னதாக, தேவிக்கும், கரூர் மாவட்டத்தை சேர்ந்த முனியாண்டி என்பவருக்கும் ஏற்கனவே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. முனியாண்டிக்கு திருமணமாகி 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். எனினும் தேவியுடன் ஒன்றாக மில்லில் வேலைபார்த்தபோது, இவர்களுக்கு நட்பு ஏற்பட்டு, அது தகாத உறவில் முடிந்துள்ளது.

ஒருகட்டத்தில் தனியாக வீடு எடுத்து, தேவியை அங்கு அழைத்து சென்று குடித்தனம் நடத்தியதாக தெரிகிறது. இதற்கு நடுவில், தன்னுடைய மனைவியை காணாமல் முருகவேல், பல இடங்களில் தேடினார்..

கள்ளக்காதலன்: இறுதியில், கள்ளக்காதலனுடன் தனிக்குடித்தனம் நடத்துவது அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.. உடனே அவரது வீட்டை தேடிக்கண்டுபிடித்து, மனைவியிடம் சமாதானம் பேசி அழைத்து வந்தார். சொந்த ஊரில் இருந்தால் முனியாண்டி வந்துவிடுவார் என்பதால் தாராபுரத்தில் வீடு எடுத்து, தேவியுடன் குடும்பம் நடத்தினார்.

ஆனால், முனியாண்டி மறுபடியும் தேவியை தேடிக் கொண்டு தாராபுரத்துக்கு வந்துவிட்டார்.. தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு, தேவியை அழைத்துள்ளார்.. உடனே தேவியும், முனியாண்டியுடன் கிளம்பி சென்றுவிட்டார். இப்போது மறுபடியும் முருகவேல் மனைவியை தேடிச்சென்று, சமாதானம் பேசி அழைத்து வந்தார். இந்த முறை தாராபுரம் போகாமல், திருப்பூரில் தனியாக வீடு எடுத்து, அங்கு மனைவியுடன் குடும்பம் நடத்தினார் முருகவேல்.

முனியாண்டி: ஆனால், அங்கேயும் முனியாண்டி தேடி வந்துவிட்டார்.. இப்போது எங்கு போவதென்று தெரியாமல், மனைவி, மகனுடன் முருகவேல் கருமத்தம்பட்டி அருகே உள்ள தோட்டத்து வீட்டிற்கு இடம் மாறி வந்திருக்கிறார் முருகவேல்.

ஆனால், முனியாண்டி நேற்று சாயங்காலம் தேவியை தோட்டத்துக்கே வந்துவிட்டார்.. தோட்டத்து வீட்டுக்குள் முனியாண்டி நுழைந்ததுமே, முருகவேல் அதிர்ச்சி அடைந்தார்..

"என் குடும்பத்தை நிம்மதியாக இருக்க விட மாட்டாயா?" என்று கேட்டுக் கொண்டே, அவரது நெஞ்சில் கத்தியால் குத்தினார்.. அந்த கத்தி முனியாண்டியின் நெஞ்சில் பாய்ந்தது.. இதை கொஞ்சமும் எதிர்பாராத முனியாண்டி, வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து, கத்தியை நெஞ்சில் இருந்து பிடுங்கியிருக்கிறார்.. ஆனால், ரத்தம் அளவுக்கு அதிகமாக கொட்டியிருக்கிறது.. இதனால், அங்கேயே சுருண்டு விழுந்தார்.

விசாரணை: இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்து விட்டு முனியாண்டி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முருகவேலை பிடித்து விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்கள்..

தன்னுடைய மனைவியை முனியாண்டி 5 வருடமாக அபகரித்து வைத்திருந்தாராம்.. 3 முறை அவரிடமிருந்து பிரித்து வந்தும்கூட, விரட்டி விரட்டி வந்த ஆத்திரத்தில் கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இதனால், கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+