2024ல் மோடியை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவோம்.. கோவை பாஜக செயற்குழு கூட்டத்தில் உறுதி
கோவை: நாட்டில் மீண்டும் பாஜக ஆட்சியை மலர வைப்பது என்றும் தூய்மையான நல்லாட்சியை கொடுத்து வரும் மோடியை பிரதமராக மீண்டும் ஆட்சியில் அமர்த்துவோம் எனவும் கோவையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தமிழக பாஜக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதிகரிக்கும் கள்ளச்சாராய மரணங்கள்..குடிக்கும் பழக்கத்தை தூண்டும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் பாஜக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாஜக செயற்குழு கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மாநிலத்தலைவர் அண்ணாமலை , "தமிழ் மக்கள் மீது அதிகளவில் பிரதமர் அன்பு வைத்துள்ளார். ஜனநாயகத்தின் தலைவராக பிரதமர் இருக்கிறார். ஒன்பது ஆண்டை கடந்து 10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இன்னும் 5 ஆண்டு காலம் அவரை பிரதமராக ஆக்க வேண்டும்.

தேனிக்களை போல் சுறுசுறுப்பாக பணி செய்ய வேண்டும். தமிழகத்தில் இருந்து எத்தனை எம்பிக்களை அனுப்பப் போகிறோம் என்பதை திட்டமிட வேண்டும். இந்தியாவை அடிப்படையில் இருந்து மாற்றியுள்ளார் பிரதமர். இன்னொரு பாதையில் அழைத்துச் சென்றுள்ளார். குடிமக்களை பாதுகாப்பது மன்னனின் முதல் பணி. அதை தான் பிரதமர் செய்து வருகிறார்.
மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக நாம் மாறப் போகிறோம். அதற்கான அடிப்படை பணியை பிரதமர் செய்து வருகிறார். சீனாவும் இந்தியாவும் தான் வருங்காலத்தில் மாறி மாறி பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக இருக்கும் என்று கூறினார். 350 ஆண்டுகளுக்கு பிறகு பொருளாதாரத்தில் முன்னேறும் நாடாக நாம் உள்ளோம். இந்தியாவின் பொருளாதரம் உயர உயர தமிழ்நாட்டின் பொருளாதாரம் குறைகிறது. மற்ற மாநிலங்கள் முன்னேறி வருகிறது. திராவிட அரசின் 30 சதவீதம் கமிஷனால்தான் தமிழ்நாடு பின்னோக்கிச் செல்கிறது.
மே 30 முதல் ஜூன் 30 வரைக்கும் பிரதமரின் நலத்திட்டங்களை பெரிய இயக்கமாக மக்களிடம் எடுத்து செல்கிறோம். பாஜக ஆட்சிக்கு வந்தபோது 18 ஆயிரம் கிராமங்களில் இந்தியாவில் மின்சாரம் இல்லை. ஆனால் இப்போது மின்சாரம் இல்லாத கிராமமே கிடையாது. இப்போது நம்முடைய நாடு 100 சதவீதம் மின்சாரம் நிறைந்த நாடாக உள்ளது என்று கூறினார்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாரதத்தை உலகின் வழிகாட்டியாக மாற்றுவதற்கு, கடந்த ஒன்பது ஆண்டுகளாக அல்லும் பகலும் அயராது உழைத்து வரும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு, மனமார்ந்த நன்றி தெரிவித்து, கடைக்கோடி மக்களுக்கும் அனைத்து பலன்களும் கிடைக்கச் செய்து, தூய்மையான நல்லாட்சியை வழங்கிக் கொண்டிருக்கும் மோடியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த உறுதி ஏற்போம்.
கடந்த காலத்தில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சி தடை செய்திருந்த தமிழக பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் அவசரச் சட்டத்திற்குக் குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற்று, சட்டத்தினை நிறைவேற்றி, ஏறுதழுவும் ஜல்லிக்கட்டு விளையாட்டை நிரந்தரமாக மீட்டெடுத்து, தமிழரின் மானம் காத்த பாரத பிரதமர் அவர்களுக்கு, உலகத் தமிழர்களின் சார்பில், நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இரண்டு ஆண்டு காலமாகத் தமிழகம் இருண்ட மாநிலமாக இருந்து வருகிறது. தடையற்ற மின்சாரம் வழங்குவதற்குப் பதிலாக, தடையில்லாமல் மின்சார தடையை திமுக அரசு ஏற்படுத்தி வருகிறது. திறனற்ற திமுக அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியான தடையில்லாத மின்சாரம் வழங்குவோம் என்கிற உறுதிமொழியைக் காப்பாற்றிட, தமிழக முதல்வர் மு.க அவர்களை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடுவோம் என்று தேர்தல் வாக்குறுதியாக வழங்கி, ஆட்சி பொறுப்பேற்றதும், எங்குப் பார்த்தாலும் அரசு மதுபானக்கடைகள் திறக்கப்பட்டு வருவதும், பெண்களுக்கென்று சிறப்பு மதுபான கூடங்கள் திறக்கப்பட்டு வருவதும், போதாதென்று, டாஸ்மாக் கடைகளுக்குப் போட்டியாகக் கள்ளச் சாராய வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது .
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்து 22 நபர்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் அனுதினமும் கள்ளச் சாராய மரணங்கள் அரங்கேறி வருகின்றன. குடிக்கும் பழக்கத்தைத் தூண்டி, மக்களின் உயிர் குடிக்கும், திமுக அரசுக்கு, கடுமையான கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு












Click it and Unblock the Notifications