Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை மதுக்கரை ரயில் வழித்தடத்தில் ஏஐ உத்தி.. யானைகளுக்கு வரப்பிரசாதம்.. தமிழக வனத்துறை சூப்பர்

Subscribe to Oneindia Tamil

கோவை: செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்காணிப்பு திட்டத்தை கோவை மதுக்கரையை ஒட்டிய தண்டாவளத்தில் தமிழக வனத்துறை செயல்படுத்தி உள்ளது. இந்த திட்டம் யானைகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும். இனிமேல் மதுக்கரை வழித்தடத்தில் யானைகளுக்கு ரயில்களால் எந்த ஆபத்தும் நேராது என்று நம்பப்படுகிறது.

ஏனெனில் மதுக்கரையில் உள்ள தண்டவாளங்களில் உள்ள ஏஐ கண்காணிப்பு அமைப்பு இனிமேல் யானைகள் தண்டவாளத்தில் வரும் போது, அந்த நேரத்தில் ரயில் ஓட்டும் லோகோ பைலைட்டுகளை தானாகவே எம்எம்எஸ் அனுப்பி எச்சரித்துவிடும் என்கிறார்கள். எப்படி என்பதை பார்ப்போம்.

TN Forest set ups AI strategy for monitoring elephants on Coimbatore Madhukkarai railway tracks

கோவையை கேரளாவுடன் இணைக்கும் முக்கியமான பகுதி மதுக்கரை. இது கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை இணைக்கும் வனப்பகுதியாகும். இந்த மதுக்கரை வனப்பகுதி வழியாகவே கேரளா-தமிழ்நாடு இடையே பிரதான ரயில் தண்டவாளம் அமைந்துள்ளது . இதை கடந்து தான் பாலக்காடு செல்ல முடியும்.

இதனிடையே மதுக்கரை அருகே எட்டிமடை பகுதியில் ரயில் தண்டவாளங்கள் உயரமாக இருப்பதால் வனப்பகுதியில் ரயில் தண்டவாளங்களில் ஏறிச் சென்று யானைகள் கடக்கின்றன. அப்படி யானைகள் அடிக்கடி ரயில் தண்டவாளங்களை கடக்கும் போது சில நேரங்களில் ரயில் தண்டவாளங்களில் சிக்கி யானைகள் உயிரிழப்பது நடக்கிறது.

இதனிடையே மதுக்கரை எட்டிமடை பகுதியில் யானைகள் அடிப்பட்டு இறப்பதை தடுக்க புதிய திட்டம் தயாரிக்கப்பட்டது. இதன்படி மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் தண்டவாளத்தின் கீழ்ப்பகுதியில் யானைகள் எளிதாக கடக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக தற்போது காட்டு யானைகள் மிகவும் எளிதாக கடந்து சென்றும் வருகின்றன.

இந்த திட்டம் வெற்றியடைந்ததால், மற்றொரு சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் அந்தப்பகுதியில் 12-க்கும் மேற்பட்ட நவீன கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டு காட்டு யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுக்கரையில் இருந்து எட்டிமடை வரை காட்டு யானைகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியே வந்து விவசாய விளை நிலங்களுக்குள் புகுந்து செல்வது நடக்கிறது. அதற்கு யானைகள் தண்டவாள பகுதியை கடந்துதான் வரவேண்டிய நிலை உள்ளது. எனவே யானைகள் தண்டவாளத்தை கடந்து வருவதை நிரந்தரமாக தடுக்க வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர்.

மதுக்கரை ரயில் நிலையம் அருகே உள்ள குடோன் பகுதியில் இருந்து எட்டிமடை அருகே வரை 3½ கி.மீ. தூரத்துக்கு காட்டு யானைகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.இதை தடுக்க இந்த 3½ கி.மீ. தூரத்துக்கும் தண்டவாளத்தை ஒட்டி பழைய தண்டவாள இரும்பு கம்பிகள் மூலம் தடுப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் எனில், மதுக்கரையில் யானைகள் ரயில் தண்டவளங்களில் அடிப்பட்டு இறப்பதை தடுக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்பை தமிழக வனத்துறை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஏஐ அமைப்பு ரயில்வே தண்டவாளத்தில் யானைகளின் நடமாட்டத்தை பதிவு செய்து வருகிறது. எப்படி என்றால், 12 இடங்களில் நவீன தெர்மல் கேமராக்கள் விலங்குகளின் நடமாட்டத்தை முன்கூட்டியே கண்டறிவதற்காக ரயில் பாதையில் உள்ள முக்கியமான இடங்களில் நிறுவப்பட்டுள்ளது. அங்கிருந்து கண்காணிக்கும் ஏஐ அமைப்பு, யானைகள் மற்றும் விலங்குகள் நடமாட்டத்தை கண்காணித்து, நிகழ்நேரத்தில் எடுக்கப்பட்ட பட விவரங்களை , போன் கால் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் லோகோ பைலட்டுகளை எச்சரிக்கை செய்கிறது. இவை அனைத்தையும் ஏஐ தானாகவே கட்டுப்பாட்டு அறையுடன் இணைந்து செயல்படுத்தும். இந்த திட்டம் காரணமாக இனிமேல் மதுக்கரையில் யானைகள் ரயில் மோதி இறப்பது நிச்சயம் தடுக்கப்படும் என்றும், யானைகளுக்கு இது வரப்பிரசாதம் என்றும் நம்பப்படுகிறது. இதனிடையே நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி யானைகள் ரயிலில் மோதுவதை தடுக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் என்று தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+