Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செந்தில் பாலாஜிக்கு சிறந்த சிகிச்சை தரமுடியாத தமிழக அரசு? எய்ம்ஸ்க்கு அனுப்பலாம் என வானதி சீண்டல்

Subscribe to Oneindia Tamil

கோவை: ‛‛செந்தில் பாலாஜியை பார்த்தால் வருத்தமாக தான் இருக்கிறது. ஒரு அமைச்சருக்கு கூட சிறையில் உணவும், மருத்துவ வசதிகளும் சரியாக இல்லாததால்தான், அவருக்கு திரும்பத்திரும்ப உடல்நிலை சரி இல்லாமல் போகிறது. இதனால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும்'' என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சீண்டினார்.

தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியின் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

 TN government unable to provide better treatment to Senthil Balaji? Vanathi srinivasan wants to him admit in AIIMS

அப்போது அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துரை அவரை கைது செய்தது. முன்னதாக அவரை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்து சென்றது.

அப்போது அவர் நெஞ்சுவலிப்பதாக கூறி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். புழல் சிறையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். உடல்நலத்தை காரணம் காட்டி அவர் ஜாமீன் கோரியும் கூட உச்சநீதிமன்றம் வழங்கவில்லை. இதனால் அவர் கடந்த 5 மாதமாக தொடர்ந்து சிறையிலேயே இருக்கிறார்.

இந்நிலையில் தான் கடந்த 15ம் தேதி செந்தில் பாலாஜி உடல்நலக்குறைவால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்த பிறகு அவர் மேல்சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அவருக்கு ரத்த பரிசோதனை, எக்கோ பரிசோதனை, வயிற்று வலிக்கான சோதனை, கழுத்து வலி, முதுகெலும்பு, எம்ஆர்ஐ, எம்ஆர்ஏ, எம்ஆர்சிபி, மூளை நரம்பியல் சார்ந்த இஇஜி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் டாக்டர்கள் கண்காணிப்பில் இருக்கிறார்.

இந்நிலையில் தான் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நலம் குறித்து கேள்வி எழுப்பப்ட்டது. அதாவது இன்று கோவை கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி ராமநாதபுரம் மண்டல் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் 107வது மனதின் குரல் நிகழ்ச்சியை வானதி சீனிவாசன் எம்எல்ஏ கேட்டார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது இந்த கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு வானதி சீனிவாசன், ‛‛அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை அடிக்கடி மோசமாகி கொண்டிருக்கிறது என்பது ஒரு மனிதாபிமானத்தின் அடிப்படையில் எங்களுக்குமே வருத்தமாகத்தான் உள்ளது. ஒருவேளை சிறைத்துறை சரியாக அவரை கவனிக்கவில்லையா? தமிழக அரசின் கண்காணிப்பின் கீழ்தான் அவர் இருக்கிறார்.

ஒரு அமைச்சருக்குக்கூட சிறையில் உணவும், மருத்துவ வசதிகளும் சரியாக இல்லாததால்தான், அவருக்கு திரும்பத்திரும்ப உடல்நிலை சரி இல்லாமல் போகிறது என்பது எங்களுக்கு வரக்கூடிய செய்திகளில் இருந்து தெரியவந்திருக்கிறது. ஒருவேளை தமிழக அரசு அவருக்கு சிறந்த மருத்துவத்தையோ, அவருடைய உடல்நிலையையோ கவனிக்க முடியாவிட்டால் மத்திய அரசின் உதவியைக்கூட நாடலாம். எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளுக்குக்கூட அவரை அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கலாம். எனவே, மாநில அரசு அது குறித்தும் யோசிக்க வேண்டும்'' என சீண்டினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+