மும்மொழிக் கொள்கையை நான் ஆதரிக்கவே இல்லை... அடித்து சொல்லும் முதல்வர் எடப்பாடி!
Recommended Video
கோவை: மும்மொழிக் கொள்ககையை தாம் ஒருபோதும் ஆதரிக்கவே இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை இந்தியை கட்டாயப் பாடமாக்க பரிந்துரைத்தது. மும்மொழிக் கொள்கை மூலம் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சித்தது.
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்தி பேசாத மாநிலங்களும் தமிழகத்தைப் போலவே போர்க்குரல் எழுப்பின.

தொடரும் மும்மொழிக் கொள்கை
இதனால் இந்தி கட்டாயம் என்பதை நீக்குவதாக மத்திய அரசு விளக்கம் தந்தது. ஆனால் மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெறவில்லை. இதனால் மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து தமிழகம் குரல் கொடுத்து வருகிறது.

எடப்பாடியின் ட்வீட் கோரிக்கை
இந்நிலையில் வெளி மாநிலங்களில் தமிழை விருப்பப் பாடமாக படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்வீட்டரில் கோரிக்கை வைத்தார். இதனால் மும்மொழிக் கொள்கையை முதல்வர் ஏற்கிறாரா? என்கிற சர்ச்சை வெடித்தது. இதையடுத்து சர்ச்சைக்குரிய அந்த ட்வீட் பதிவை முதல்வர் எடப்பாடி நீக்கிவிட்டார். இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

குடிநீர் தட்டுப்பாடு -நிதி ஒதுக்கீடு
சேலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இரட்டை அடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதி திறக்கப்பட உள்ளது.. பருவமழை பொய்த்ததன் விளைவாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தேர்தலுக்கு முன்பாகவே ஆலோசணை கூட்டம் நடத்தி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவிரி நீரை திறக்கும்
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்படும், காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என கூறியதை அரசியல் கட்சிகள் கண்டிக்கவில்லை. ஜூன் மாதத்திற்கு திறக்க வேண்டிய தண்ணீரை குறுவை சாகுபடிக்கு கர்நாடகா திறக்கும் என நம்புகிறோம்.

வாக்கு சரிவுக்கு காரணம்
அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்கிறது. பத்திரிக்கைகள் சில விசயங்களை பெரிதுபடுத்தி குளிர் காய நினைக்கின்றன. நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் நிற்காமல் குறைந்த தொகுதியில் போட்டியிட்டதால் தான் வாக்கு சதவீதம் குறைந்துள்ளதே தவிர வாக்கு வங்கி குறையவில்லை.

இருமொழிக் கொள்கைதான்
திமுக நடைமுறைபடுத்த முடியாத பொய் வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றனர். மும்மொழி கொள்கையை ஆதரிப்பதாக எந்த இடத்திலும் நான் சொல்லவில்லை. டெல்லியில் சில பத்திரிகையாளர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் பயிற்றுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன் அடிப்படையில் தான் தமிழை பிற மாநிலங்களில் விருப்ப பாடமாக சேர்க்க வேண்டும் என்று பிரதமருக்கு டிவிட்டரில் கோரிக்கை வைத்தேன். இரு மொழி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக தனது டிவிட்டர் கருத்து திரிக்கப்பட்டது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
கீழ்தளத்தில் ராஜினாமா, மேல்தளத்தில் தவெகவில் இணைப்பு! குதிரை பேர கலாச்சாரம்! எடப்பாடி கண்டனம் -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை












Click it and Unblock the Notifications