ஈஸ்வரன் கோயிலில் கந்த சஷ்டி கவசமா? கவர் பண்ணாதேனு அண்ணாமலை சொன்னார்ல விடுங்களேன்.. செந்தில் பாலாஜி

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோயிலில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் படித்த கோமாளியை எங்காவது பார்த்ததுண்டா என அமைச்சர் செந்தில் பாலாஜி கிண்டல் செய்துள்ளார்.

திமுக ஆட்சி அமைத்த போதிலிருந்தே திமுக நிர்வாகிகளுக்கும் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலைக்கும் இடையே கருத்து மோதல்கள் வெடித்து வருகின்றன. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் விமர்சித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி அதிகாலை கோவை உக்கடம் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் தெருவில் கார் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.

சோதனை

சோதனை

அவருடைய வீட்டில் சோதனை நடத்தப்பட்டதில் 100 கிலோ வெடிபொருட்கள் இருந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது. அது போல் அவர் 2019ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை அமைப்பால் விசாரணைக்குள்படுத்தப்பட்டவர் என்ற தகவலையும் காவல் துறை தெரிவித்திருந்தது.

துரித நடவடிக்கை

துரித நடவடிக்கை

இந்த சம்பவம் நடந்து உடனே காவல் துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து இறந்தவர் யார், அவருடைய கூட்டாளிகள் என்ன, பின்புலம் என்ன உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் நடந்து 4 ஆவது நாள் தேசிய புலனாய்வு முகமைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

4 நாட்கள் தாமதம்

4 நாட்கள் தாமதம்

எனினும் 4 நாட்கள் தாமதமாக என்ஐஏவுக்கு வழக்கை மாற்றியது ஏன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இந்த தாக்குதல் குறித்து கடந்த 18 ஆம் தேதியே மத்திய உளவுத் துறை மூலம் மாநில காவல் துறை டிஜிபிக்கு தகவல் கிடைத்தும் அந்த சம்பவத்தை தடுக்காதது ஏன் என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியிருந்தார்.

 அண்ணாமலை பிரஸ் மீட்

அண்ணாமலை பிரஸ் மீட்

மேலும் கடலூரில் ஒரு ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர்கள் குரங்கை போல் ஏன் தாவுகிறீர்கள் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியை சாராய விக்கிறவன் என்றும் விமர்சித்திருந்தார் அண்ணாமலை. இந்த நிலையில் நேற்றைய தினம் கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு அண்ணாமலை சென்றிருந்தார். அங்கு அவர் அந்த கோயிலில் கந்த சஷ்டி கவசம் படித்தார்.

குரங்கு போல்

குரங்கு போல்

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த போது குரங்கு என சொல்லியமைக்கு மன்னிப்பு கேட்குமாறு பத்திரிகையாளர்கள் கோரிக்கைவிடுத்தனர். ஆனால் அண்ணாமலையோ என் மீது எந்த தவறும் இல்லை, நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும், என் ரத்தத்திலேயே மன்னிப்பு என்பது கிடையாது . உங்களுக்கு பிடிக்காவிட்டால் என்னை கவர் செய்யாமல் புறக்கணித்து கொள்ளலாம் என்றார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி பிரஸ் மீட்

அமைச்சர் செந்தில் பாலாஜி பிரஸ் மீட்

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மின் துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவையில் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், வடகிழக்கு பருவமழையை சமாளிக்கும் விதத்தில் ஒன்றரை லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன என்றார்.

கோமாளி என விமர்சனம்

கோமாளி என விமர்சனம்

மேலும் அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அந்த கோமாளி பற்றி ஏன் கேட்கிறீர்கள். கோட்டை ஈஸ்வரன் கோயிலில் உட்கார்ந்து கந்த சஷ்டி கவசம் படித்த கோமாளியை எங்காவது பார்த்ததுண்டா என கேள்வி எழுப்பினார். மேலும் அண்ணாமலை பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள கூடாது என்றார். மீண்டும் மீண்டும் அண்ணாமலை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அந்த கோமாளி பற்றி கேள்வி கேட்காதீர்கள், தனது பிரஸ்மீட்டை பத்திரிகையாளர்கள் புறக்கணிக்கலாம் என சொன்னாரே அவரை பற்றி நீங்கள் கேட்பதை நிறுத்திவிடலாமே என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+