கோவைக்கு விரைவில் குட் நியூஸ் வரும்.. முதல்வர் ஸ்டாலினே அறிவிப்பார்.. அமைச்சர் தங்கம் பேட்டி!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் உள்ள தொழில் முனைவோர் மற்றும் தொழில் அமைப்புகளுடன் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்துரையாடினர். பின்னர் இருவரும் நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறியதாவது:- 2006 -11 ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் கூட்டுறவு தொழில் பேட்டை 314 ஏக்கரில் அமைக்க திட்டமிட்டு இடம் வழங்கப்பட்டது.

TN Minister Thangam Tennarasu has said that CM MK Stalin would soon announce the plan for an industrial park in Coimbatore

திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதால் அதிமுக ஆட்சியில் அதை கைவிட்டு முடக்கினார்கள். இன்று அதை ஆய்வு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. 314 ஏக்கரில் தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும். தொழில்பேட்டை அமைந்தால் 50 ஆயிரம் பேர் வரை பலன் அடைவார்கள் என தெரிவித்தார்.

தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:- இன்று தொழில்துறையினருடனான சந்திப்பில் குறைகளை கேட்டறிந்தோம். கொரொனா காலங்களில் தொழில்கள் பாதிக்காமல் இருக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது .17,000 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்த்து 56000 பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறோம்.

கோவையில் இன்று துவங்கிய அமேசான் நிறுவன மையத்தினால் உள்ளூரை சேர்ந்த 2000 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கோவையில் தொழில் பூங்கா குறித்த திட்டம் குறித்து விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் எனவும் தொழில் துறையினர் பல்வேறு பிரச்சினைகளை கூறி உள்ளனர். முதல்வரின் கவனத்திற்கு இது கொண்டு செல்லபட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்று அமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். உலக முதலீட்டாளர் மாநாட்டில் வந்த முதலீடுகள் குறித்த கேள்விக்கு பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்க இருக்கின்றது.வெள்ளித்திரையில் காண்க என தங்கம் தென்னரசு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+