Toll Fee Scam: சுங்கச்சாவடிகளில் நடக்கும் சிங்கிள் கட்டண கொள்ளை.. மத்திய அரசுக்கு கார் உரிமையாளர்கள் கோரிக்கை
கோவை: சுங்கச்சாவடிகளில் ஒரே நாளில் இருமுறை பயணத்திற்கு கட்டணம் செலுத்த முயன்றால், அதற்கு வாய்ப்பு இல்லை என்றும் சிங்கிள்தான் இருப்பதாகவும், டபுள் இல்லை என்றும் கூறுவதாக கார் ஓட்டுநர்கள் பலர் குற்றச்சாட்டுகிறார்கள். சுங்கச்சாவடிகளில் ஒரே நாளில் இருமுறை பயணம் மேற்கொள்வதற்கான கட்டணச் சலுகை முறையைச் சில இடங்கள் தவிர்ப்பதை காணமுடிந்தது.
சுங்கச்சாவடிகளில் ஒரே நாளில் இருமுறை பயணம் மேற்கொள்வதற்கான கட்டணச் சலுகை முறையை, சுங்கச்சாவடி குத்தகைதாரர்கள் தவிர்ப்பதாக குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறது.ஏனெனில் சட்டப்படி 24 மணி நேரத்திற்குள் திரும்ப வரும் பயணங்களுக்குக் கட்டணச் சலுகை உண்டு. ஆனால், நடைமுறையில் கார்ஓட்டுநர்கள், வாகன ஓட்டிகள் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். அந்த சிக்கல்களை பார்ப்போம்

FASTag முறைக்கு மாறியது
முன்பு காகித ரசீது வழங்கப்பட்டபோது, நாம் "ரிட்டர்ன் பாஸ்" கேட்டால் உடனே தள்ளுபடி விலையில் கொடுத்துவிடுவார்கள். இப்போது FASTag வந்த பிறகு, இந்த முறை ஆட்டோமெட்டிக் ஆகிவிட்டது. முதல் முறை கடக்கும்போது முழுத் தொகை பிடிக்கப்படும்.
24 மணி நேரத்திற்குள் அதே சுங்கச்சாவடியை மீண்டும் கடந்தால், தானாகவே 'ரிட்டர்ன்' கட்டணத்தை மட்டும் சிஸ்டம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், சில நேரங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் முழுத் தொகையே பிடிக்கப்படுவது நடக்கிறது.
கணக்கீடு முறை மாற்றம்
பல சுங்கச்சாவடிகள் 'ஒரே நாள்' என்பதை அன்றைய நள்ளிரவு 12 மணி வரை என்று கணக்கிடுகிறார்கள். நீங்கள் இரவு 11 மணிக்குச் சென்றுவிட்டு, அதிகாலை 1 மணிக்குத் திரும்பினால், அது அடுத்த நாளாகக் கருதப்பட்டு மீண்டும் முழுத் தொகை வசூலிக்கப்படுகிறது. சட்டப்படி இது 24 மணி நேரக் கணக்காக இருக்க வேண்டும், ஆனால் நடைமுறையில் குழப்பம் இன்னமும் நிலவுகிறது.
வருமான இழப்பைத் தவிர்க்க இப்படி திட்டம்
சில சுங்கச்சாவடி குத்தகைதாரர்கள் அதிக வருமானம் ஈட்டவே விரும்புவார்கள். மக்கள் ரிட்டர்ன் பாஸ் சலுகையைப் பயன்படுத்துவதை அவர்கள் ஊக்குவிப்பதில்லை. FASTag-ல் இதற்கான வெளிப்படைத்தன்மை குறைவாக இருப்பதை அவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு அதிகரித்துள்ளது.
மாதந்திர பாஸ்
உள்ளூர் வாசிகள் அல்லது அடிக்கடி அந்த வழியில் செல்பவர்கள் 'ரிட்டர்ன்' சலுகையைத் தேடாமல், மாதாந்திர பாஸ் எடுக்க வேண்டும் என்று சுங்கச்சாவடி நிர்வாகம் எதிர்பார்க்கிறது. இது அவர்களுக்குத் தடையற்ற வருமானத்தை உறுதி செய்வதால் இதைத்தான் சுங்கச்சாவடி நிர்வாகம் விரும்புகிறது.
புகார் அளிக்கலாமா
இது போன்ற சூழலில் NPCI இணையதளத்தில் புகார் அளிக்க முடியும். அதாவத உங்கள் FASTag கணக்கில் இருந்து 24 மணி நேரத்திற்குள் இருமுறை முழுத் தொகை எடுக்கப்பட்டால், 1033 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு அல்லது அந்தந்த வங்கி செயலியில் புகார் அளித்து ரீஃபண்ட் பெறலாம்.
NHAI விதிகள் என்ன
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விதிப்படி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்ப வரும் வாகனங்களுக்குச் சலுகை வழங்குவது கட்டாயம் ஆகும். எனவே சுங்கச்சாவடியில் சலுகைகள் வழங்க மறுத்தால் உடனே புகார் அளிக்கலாம். அதேபோல் ஆண்டு பாஸ் 3000 கொடுத்து எடுத்து வைத்துக் கொண்டால் இந்த சிக்கல்களை சரி செய்யலாம். தீர்ந்த உடன் பாஸ் மீண்டும் எடுக்கலாம் என்பதால் இது பயனுள்ளதாக இருக்கும்
சுங்கச்சாவடிகள் எதிர்காலத்தில் இருக்காது
இந்தியாவின் பல நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளே இல்லாமல், GPS மற்றும் கேமரா (ANPR) மூலம் பயணம் செய்யும் தூரத்திற்கு மட்டும் கட்டணம் வசூலிக்கும் முறை வரப்போகிறது. விரைவில் இந்த முறை நடைமுறைக்கு வந்தால், பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்.












Click it and Unblock the Notifications