சென்னிமலையை ஏசு மலை என பெயர் மாற்ற கோரிக்கை.. தூண்டிவிட்டதே இந்து முன்னணி? கோவை ராமகிருஷ்ணன் திடுக்!
கோவை: சென்னிமலையை ஏசு மலை என பெயர் மாற்ற வேண்டும் என பேசியதால் கைது செய்யப்பட்ட கிறிஸ்தவ முன்னணியின் தலைவர் சரவணன் ஜோசப் பின்னணியில் இந்து முன்னணிதான் இருப்பதாக தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை. ராமகிருஷ்ணன் (கோவை ராமகிருட்டிணன்) திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே முருங்கதொழவு கத்தக் கொடிகாடு என்ற இடத்தில் வீடு ஒன்றில் கிறிஸ்தவர்களின் ஜெபக் கூட்டம் நடத்தப்பட்டது. ஜான் பீட்டர் என்பவரது வீட்டுக்குள் ஜெபக் கூட்டம் நடத்தியதற்கு இந்து முன்னணி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த எதிர்ப்பும் மோதலாக வெடித்தது. இதனால் இந்து முன்னணி அமைப்பினர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஏசுமலை பெயர் மாற்ற கோரிக்கை: இந்து முன்னணி அமைப்பின் இத்தலையீட்டைக் கண்டித்து சென்னிமலையில் கிறிஸ்துவ முன்னணி என்ற அமைப்பின் சார்பில் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் பேசிய கிறிஸ்துவ முன்னணியின் தலைவர் சரவணன் ஜோசப், சென்னிமலையை ஏசுமலை அல்லது கல்வாரி மலை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என தொடர்பே இல்லாமல் கோரிக்கை வைத்தார். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
பிரம்மாண்ட போராட்டம்: சென்னிமலையை ஏசுமலையாக்க வேண்டும் என கிறிஸ்தவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்; இதனைத் தடுக்க இந்துக்கள் ஒன்று கூடுங்கள் என அழைப்பு விடுத்து பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தை இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சென்னிமலையில் நடத்தின. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

பின்னணியில் கலவர கும்பல்: இந்த நிலையில் சென்னையை சேர்ந்த பாதிரியார் குணசேகர சாமுவேல் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், கிறிஸ்துவ முன்னணி என்ற பெயரையே நாங்கள் கேள்விபட்டது இல்லை. சென்னிமலையை ஏசுமலையாக்க வேண்டும் என்ற கோரிக்கையின் பின்னணியில் ஒரு கலவர கும்பல் உள்ளது. அந்த கும்பலை தமிழ்நாடு அரசு கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இந்து முன்னணி செந்தில்குமார் கைது: இதனிடையே ஈரோடு அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ஒன்றில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தியதாக இந்து முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் செந்தில்குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்த இந்து முன்னணி, சென்னிமலையை ஏசுமலை என அறிவிக்க சொன்ன சரவணன் ஜோசப்பை ஏன் கைது செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பியது.
சரவணன் ஜோசப் கைது: இதனைத் தொடர்ந்து கிறிஸ்துவ முன்னணி என்ற அமைப்பின் தலைவரான சரவணன் ஜோசப் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையை இந்து முன்னணி அமைப்பும் வரவேற்று சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டிருந்தது.
கோவை ராமகிருஷ்ணன் திடுக் தகவல்: தற்போது இந்து முன்னணியின் பொதுச்செயலாளர் செந்தில்குமாரும் கிறிஸ்துவ முன்னணியின் தலைவர் சரவணன் ஜோசப்பும் ஒன்றாக இருக்கும் சில போட்டோக்களை தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷணன் தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், இந்து முன்ணணி செந்தில்+கிறிஸ்தவ முன்ணணி சரவணன் ஜோசப் = ஆகிய இந்த இருவரின் கள்ள கூட்டணி மத துவேச பிரச்சாரத்திற்கு பலியான ஆன அப்பாவி ஆயிரக்கணக்காண பொதுமக்கள் எனவும் கோவை ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். சென்னிமலையை ஏசுமலையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்த சரவணன் ஜோசப்பின் பின்னணியில் இந்து முன்னணிதான் தூண்டிவிட்டது என்பது கோவை ராமகிருஷ்ணனின் குற்றச்சாட்டு.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications