பாஜகவுக்கு 20 தொகுதி... அண்ணாவுக்கும் ஜெ.வுக்கும் துரோகம் செய்த அதிமுக- கோவை ராமகிருஷ்ணன்
கோவை: பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியிருப்பது அண்ணாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் அதிமுக செய்துள்ள துரோகம் என்று தந்தை பெரியார் தி.க. பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன் சாடியுள்ளார்.
Recommended Video
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் கோவை கு. இராமகிருட்டிணன் கூறியதாவது:
நூறு ஆண்டுகளாக போராடி பெற்ற சமூக நீதி, மாநில உரிமைகள், கல்வி வேலைவாய்ப்பு போன்றவை தற்போது பாஜக அரசால் பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு துணை போய் கொண்டிருக்கிறது.

இந்த பாஜக அரசை ஒழிப்பதற்கும் அதிமுக அரசை ஒழிப்பதற்காகவும் வருகின்ற சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவளிப்பதாக இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அப்பொழுதுதான் தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜக அரசை அளிக்க முடியும்.
தமிழகத்தில் மதசார்பற்ற ஆட்சியை மலர செய்ய முடியும். பாஜகவுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கியதே அண்ணாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் செய்த துரோகம். பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளிலும் முனைப்புடன் செயல்பட்டு பல்வேறு யுத்திகளுடன் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்வோம்.
இவ்வாறு கோவை கு. ராமகிருட்டிணன் கூறினார்.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications