பறையா (Pariah) விவகாரம்: பாஜக தலைவர் அண்ணாமலை மீது கோவையில் பெரியாரிஸ்டுகள் போலீசில் புகார்
கோவை: பிரதமர் மோடியை புகழ்வதற்காக பறையா (Pariah) என்ற சொல்லை இழிசொல்லாகப் பயன்படுத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை போலீசில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புகார் கொடுத்துள்ளனர்.
நாட்டின் பிரதமராக பிரதமர் மோடி பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், பறையரில் இருந்து விஷ்வ குருவாக உயர்ந்தவர் (From a pariah to a ViswaGuru) என அண்ணாமலை குறிப்பிட்டார். இதனால் பறையா என்ற சொல்லை அண்ணாமலை பயன்படுத்தியது சர்ச்சையானது.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கூறுகையில், பாப்பானுக்கே மூப்பான் பறையன், கேப்பாரில்லாமல் கீழ் சாதியானான் என்பது முதுமொழி. சனாதனத்தை- வர்ணாசிரமத்தை ஏற்காத பறையர் குடியை ஒதுக்கி வைத்ததே இந்துத்துவம் தான். அப்படிப்பட்ட மூத்த பறையர்குடியை இழிவுபடுத்தும் சாதிய மனநோயாளி @annamalai_k மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் அண்ணாமலை மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கிழி வழக்கு பதிவு செயய் வேண்டும் எனவும் அந்த புகார் மனுவில் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளனர். தந்தை பெரியார் தி.க. பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன் கொடுத்துள்ள புகாரில், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications