கோவை அவிநாசி சாலையில் வரப்போகும் மாற்றம்.. காவல் துறை அதிரடி முடிவு
கோவை: தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து கோவை வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது. அதற்கேற்ப கோவையின் உள்கட்டமைப்பு வசதியும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் நீளமான பாலமாக ஜிடி நாயுடு மேம்பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டது. ஆனாலும் அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் அதிகரித்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அவிநாசி சாலையில் மீண்டும் டிராபிக் சிக்னல் முறையை அமல்படுத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.
கோவை மாவட்டம் தொழில்துறை, கல்வி, மருத்துவம், ஐடி உள்ளிட்ட பல துறைகளில் கோவை முன்னேறி கொண்டிருக்கிறது. போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதததால் போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. முக்கியமாக கோவை மாநகரின் மக்கள் தொகை மட்டுமே 30 லட்சத்தை கடந்துள்ளது. தினசரி மற்ற மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கோவைக்கு ஏராளமான மக்கள் வருகிறார்கள்.

கோவை அவிநாசி சாலை
இதன் காரணமாக மாநகர சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக உள்ளது. இதை சரி செய்வதற்காக முக்கிய பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. அந்த வகையில் கோவை மாநகரில் ஏற்கனவே உக்கடம் மேம்பாலம், அவிநாசி சாலை மேம்பாலம், காந்திபுரம் மேம்பாலம், கணபதி டெக்ஸ்டூல் பாலம். வடகோவை மேம்பாலம் உள்ளிட்டவை உள்ளன. சாய்பாபா காலனி பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
அவிநாசி சாலையில் 10.10 கிமீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டப்பட்டது. தமிழ்நாட்டின் நீளமான மேம்பாலம் இது தான். இந்த மேம்பாலத்திற்கு தமிழ்நாடு அரசு ஜி.டி. நாயுடு பெயர் சூட்டினார்கள். கடந்த நவம்பர் மாதம் முதல் இந்த மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. அவிநாசி சாலை கோவையின் இதய பகுதியில் உள்ளது. மாவட்டத்தின் முக்கிய கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள் அங்கு உள்ளன.
சாலை விபத்துகள்
சென்னை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை இணைக்கும் பகுதியாக அவிநாசி சாலை உள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. மேம்பாலம் பணி காரணமாக அவிநாசி சாலையில் டிராபிக் சிக்னல்கள் நீக்கப்பட்டு, யூடர்ன் முறை பயன்பாட்டில் உள்ளது. மேம்பாலம் திறக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனாலும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. இப்போதும் பீக் ஹவர்ஸ்களில் அவிநாசி சாலை போக்குவரத்து நெரிசலில் திக்கு முக்காடி வருகிறது. மறுபக்கம் அங்கு சாலை விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. கடந்த 2025 வருடத்தில் மட்டும் அவிநாசி சாலையில் சுமார் 101 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 25 பேர் உயிரிழந்தனர்.
மீண்டும் வரப்போகும் மாற்றம்
இந்நிலையில் அவிநாசி சாலையில் மீண்டும் டிராபிக் சிக்னல் முறையை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசு ரூ.1 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. உப்பிலிபாளையம், ஜி.கே.என்.எம் ஜங்கசன், லட்சுமி மில்ஸ், நவ இந்தியா, ஹோப்ஸ், பயனியர் மில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் டிராப் சிக்னல் அமைக்கப்படவுள்ளது. இந்தப் பகுதியில் ஏற்கனவே உள்ள யூடர்ன் முறை அகற்றப்படவுள்ளது.
ஒவ்வொரு சிக்னலிலும் பாதசாரிகள் எளிதாக சாலை கடக்கும் வகையில் கூடுதல் நேரம் கொடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர். டிராபிக் சிக்னல் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று கூறியுள்ளனர். சாலையில் விதிகளை மீறி வேகமாக செல்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை கூறியுள்ளது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications