கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜி.பி.முத்துவுடன் சேர்ந்து இது தேவையா.. மதுக்கரை போலீசில் சரணடைந்த டிடிஎப் வாசன்.. ஜாமீனில் விடுதலை

Google Oneindia Tamil News

கோவை: ஜி.பி. முத்துவுடன் சாகச பயணம் செய்ததாக யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது கோவை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் அவர் மதுக்கரை போலீஸ் நிலையத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றார்.

Twin throttlers என்ற யூடியூப் சேனலை கோவையை சேர்ந்த 22 வயதான வாசன் நடத்தி வருகிறார். இவர் அவ்வப்போது பைக்கில் பயணம் செய்வதையும் அதில் செய்யும் சாகசங்களையும் வீடியோவாக போடுவார்.

பைக்கில் ஸ்டன்ட் செய்தல், வேகமாக செல்வது, பைக்கை தூக்கி ஓட்டுவது, ரேஸ் உள்ளிட்டவைகளை இவர் வீடியோ எடுத்து போட்டு வருகிறார். அதே வேளையில் தான் செய்யும் ஸ்டன்டுகளை யாரும் பயிற்சி இல்லாமல் செய்ய கூடாது என்ற அறிவுரைகளையும் வழங்கி வருவார்.

இப்போ ஷார்ட் ஃபிலிம்.. நெக்ஸ்ட் லார்ஜ் ஃபிலிம்.. அடுத்து இப்போ ஷார்ட் ஃபிலிம்.. நெக்ஸ்ட் லார்ஜ் ஃபிலிம்.. அடுத்து

243 கி.மீ.

243 கி.மீ.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் 243 கிமீ. வேகத்தில் வாகனத்தை இயக்கிய போதே பெரும் கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் டிடிஎஃப் வாசன் கடந்த வாரங்களுக்கு முன்னர் டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்துவை தனது சூப்பர் பைக்கில் அமர வைத்து சாகச பயணம் மேற்கொண்டார்.

எதிர்திசை

எதிர்திசை

அப்போது எதிர்திசையில் வாகனங்கள் வரிசையாக வந்து கொண்டிருந்த நிலையில் 150 கி.மீ. வேகத்தில் சென்றார். மேலும் அவரது சாகசத்தை கண்டு ஜிபி முத்து அரண்டு போனார். நடுநடுவே இரு கைகளையும் விட்டுவிட்டு வாகனத்தை இயக்கினார் வாசன். அவரது யூடியூப்பில் போட்ட இந்த வீடியோ வைரலானது. பிஸியான சாலையில் இத்தனை வேகமாக செல்வதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

ஜிபி முத்து

ஜிபி முத்து

பின்னால் அமர்ந்திருந்த ஜிபி முத்து ஹெல்மெட் ஏதும் அணியாமல் இருந்தார். தங்களது சேனலுக்கான வியூஸ்களை அதிகரிப்பதற்காக இவ்வாறு மனித உயிர்களுக்கு உலையை வைக்கும் நபர்கள் மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

வழக்கு பதிவு

வழக்கு பதிவு

இந்த நிலையில் கோவை பாலக்காடு சாலையில் இரு சக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கிய யூடியூபர் வாசன் மீது கோவை போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் டிடிஎஃப் வாசன் மதுக்கரை காவல் நிலையத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றார்.

English summary
Twin Throttlers You Tuber TTF Vasan surrendered before Madukarai Police station and gets bail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X