சொதப்பிய விமானம் - செங்கோட்டையனை வரவேற்க 4 மணி நேரமாக காத்துக் கிடந்த தவெக தொண்டர்கள்
கோவை: அதிமுகவில் கொங்கு மண்டலத்தின் முகங்களில் ஒருவராகவும், சீனியர் நிர்வாகியாகவும் இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தவெக கட்சியில் இணைந்தார். இன்று அவர் ஊருக்கு திரும்பிய நிலையில், கோவை விமான நிலையத்தில் தவெகவினர் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க திட்டமிட்டனர். ஆனால் மோசமான வானிலை காரணமாக விமானம் பெங்களூர் திருப்பிவிடப்பட்டது. இதனால் செங்கோட்டையனை வரவேற்க சென்ற தவெகவினர் சுமார் 4 மணி நேரமாக விமான நிலையத்தில் காத்துக்கிடக்கின்றனர்.
தமிழ்நாடு அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராகி வருகிறார்கள். ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுக - பாஜக கூட்டணியும் முயற்சி செய்து வருகிறார்கள். இதுதவிர தவெக, நாம் தமிழர் கட்சிகள் ஆகியோரும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள்.

தவெகவில் செங்கோட்டையன்
அதிமுக - பாஜக கூட்டணியை போலவே, தவெகவும் திமுகவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தற்போதுவரை தவெக கூட்டணியில் எந்தக் கட்சியும் அதிகாரபூர்வமாக இடம்பெறவில்லை. அதேநேரத்தில் மாற்றுக் கட்சிகளில் உள்ள சீனியர் நிர்வாகிகளை தவெகவில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
தவெகவில் அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கோட்டையன் சென்னையில் இருந்து இன்று தன் சொந்த ஊரான ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் செல்கிறார். கோவை விமானநிலையம் வந்து அங்கிருந்து அவர் கோபிசெட்டிப்பாளையம் செல்ல திட்டமிட்டார். அவருககு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்க தவெக நிர்வாகிகள் திட்டமிட்டனர்.
சொதப்பிய விமானம்
திட்டமிட்டபடி செங்கோட்டையன் சென்னையில் இருந்து இன்று பிற்பகல் 12.30 மணிக்கு இண்டிகோ விமானத்தில் கோவை புறப்பட்டார். இண்டிகோ விமானத்தில் செங்கோட்டையனுடன் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அந்த விமானம் சரியாக மதியம் 1.40 மணிக்கு கோவை விமான நிலையம் வர திட்டமிடப்பட்டிருந்தது. கோவையில் இன்று காலை முதல் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. மோசமான வானிலை காரணமாக செங்கோட்டையன் பயணித்த இண்டிகோ விமானம் திட்டமிட்டபடி கோவையில் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
அதிகாரிகள் நீண்ட நேரம் ஆலோசித்து கடைசியில் இண்டிகோ விமானத்தை தற்காலிகமாக பெங்களூரில் தரையிறக்க முடிவு செய்தனர். அதிகாரிகள் உத்தரவுப்படி மதியம் 2.30 மணியளவில் அந்த விமானம் பெங்களூர் சென்றது. பெங்களூர் விமான நிலையத்தில் விமானத்தில் பயணிகளுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டு அமர வைக்கப்பட்ட நிலையில், கோவையின் வானிலையை கண்காணித்து வந்துள்ளனர். மறுபக்கம் செங்கோட்டையனை வரவேற்க பகல் 12 மணியளவில் கோவை விமான நிலையம் வந்த தவெக தொண்டர்கள் சுமார் 4 மணி நேரமாக அவரின் வருகைக்காக காத்து கிடந்தனர்.
தொண்டர்கள் காத்திருப்பு
செங்கோட்டையன் பயணித்த அதே இண்டிகோ விமானத்தில், திமுகவின் கோவை மாவட்ட செயலாளர்கள் தளபதி முருகேசன், தொண்டாமுத்தூர் ரவி ஆகியோரும் பயணித்தனர். அவர்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செல்போனில் பேசி நிலைமையை விசாரித்ததாக கூறப்படுகிறது. அதேபோல செங்கோட்டையனிடம் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். இந்நிலையில் வானிலை சற்று சீரடைந்ததால் மதியம் 3.30 மணியளவில் அந்த விமானம் பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து கோவை விமானநிலையம் புறப்பட்டது.
-
விஜய் பற்றி.. டெல்லிக்கு பறந்த உளவுத்துறை ரிப்போர்ட்.. ஆட்டத்தை கலைத்து ஆடப்போகும் அமித் ஷா? -
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
நீட் கோச்சிங் கொடுக்கும் பள்ளிக்கு.. ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? வெளியான ஷாக் தகவல்! -
ஆம்புலன்ஸுக்கு வழி விடாதது.. சட்டவிரோதம் என தெரிந்தும் விஜய் செய்த செயல்! பாய்ந்த வழக்கு -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள் -
கல்லூரியில் இருந்து டிராப் அவுட்.. 10, 12th தேர்வை தனித்தேர்வராக எழுதிய விஜய்.. வேட்புமனுவில் தகவல் -
தவெக பெண் தொண்டர்கள் மீது மதுபாட்டில் வீச்சு.. ஆதவ் அர்ஜுனா பிரசாரத்தில் அதிர்ச்சி! -
புதுச்சேரி ரங்கசாமி டபுள் சென்டிமென்ட் சக்ஸஸ்?விஜய்யும் அந்த எலுமிச்சை பழமும்.. அப்ப தான் CM யோகமா? -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக!












Click it and Unblock the Notifications