2026 இல் விஜய் தான் முதல்வர்.. எம்ஜிஆர் அண்ணாயிஸம் தான் விஜயின் கொள்கை - செங்கோட்டையன்

Subscribe to Oneindia Tamil

கோவை: தவெக தலைவர் விஜயுடன்தான் மக்கள் சக்தி உள்ளது. என் உயிர் மூச்சு உள்ளவரை தவெகவிற்கு பணியாற்றுவேன். வரும் தேர்தலில் தவெகவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. 2026 இல் விஜய் தான் தமிழகத்தின் முதல்வர் என்று தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவுடன் முதல் முறையாக கோவை வந்த அவருக்கு, கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

vijay-will-be-the-chief-minister-of-tamil-nadu-in-2026-says-sengottaiyan

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த செங்கோட்டையன் கூறியதாவது: அதிமு இரு கூறுகளாகப் பிரிந்த நேரத்தில் ஜெயலலிதாவுடன் உறுதுணையாக இருந்து பணிகளை ஆற்றினேன். இன்றைக்கு மக்கள் சக்தியாக இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், மக்கள் சக்தி மூலமாக அவருக்கு எவ்வளவு தடைகள் வந்தாலும் 2026 இல் தமிழக முதலமைச்சராக ஆவார். மக்கள் முழு மனதோடு அவரை ஏற்றுக் கொண்டு, மக்கள் சக்தியாக அவர் அரியணையில் அமர்வார். தவெகவிற்கு வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. அது மக்கள் சக்தியாக மாறி இருக்கிறது.

தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்கு, நேர்மையான ஆட்சியை, புனிதமான ஆட்சியை உருவாக்குவதற்கு விஜய் புறப்பட்டிருக்கிறார். 2026 இல் தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் அமர்வார். மக்கள் சக்தி அவருக்காக ஒன்று சேர்ந்திருக்கிறது. 500 கோடி ரூபாய் வருவாயை தூக்கி எறிந்துவிட்டு மக்களுக்காக, புனித ஆட்சியைக் கொண்டு வருவதற்காக துணிந்து இந்த இயக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதில் நானும் இணைந்திருக்கிறேன்.

தமிழக வெற்றி கழகத்தின் இந்தக் கொள்கை உங்களை கவர்ந்தது என்று கேள்விக்கு, புதியதாக புரட்சித் தலைவர் ஆட்சி தோன்றிய பொழுது அண்ணாயிசம் என்றால் என்ன என்று கேட்டார்கள், அதுபோல எல்லோருக்கும் வீடு வேண்டும், பொருளாதாரம் உயர்த்தப்பட வேண்டும், எல்லோருக்கும் இருசக்கர வாகனத்தில் பயணிக்க வேண்டும் என மனித நேயத்தோடு தமிழக வெற்றி கழக தலைவர் அறிவித்திருக்கிறார். இரண்டு ஆட்சி நடந்து கொண்டு இருந்த நிலையில், புரட்சித்தலைவர் வழியிலும், புரட்சித்தலைவி அம்மா வழியிலும் புனித ஆட்சி நடந்தது என தெரிவித்தார்.

தற்பொழுது நடந்து கொண்டிருக்கிற இரண்டு ஆட்சியும் மாற்றப்பட வேண்டும், புதிய மக்கள் சக்தியாக விரைவில் உருவாவதை எந்த சக்தியாலும் அதை முறியடிக்க முடியாது. ஜெயலலிதா படத்தை வைத்திருக்கின்றீர்களே என நேற்று கேட்டார்கள், இங்கே ஜனநாயகம் இருக்கிறது, யார் படத்தை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என்பதை தெளிவாக சொன்னேன்.

இன்று அவருடைய (விஜய்) வாகனம் செல்கின்ற பொழுது ஒருபுறம் புரட்சித் தலைவர், மற்றொருபுறம் அண்ணா படம் இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. திராவிட இயக்கத்தை மீண்டும் தமிழகத்தில் உருவாக்க புரட்சித் தலைவர் வழியில், புரட்சித்தலைவி அம்மா வழியில், பயணிக்க இருக்கின்றோம். மூன்றாவதாக மக்கள் சக்தியோடு எங்கள் பணிகள் அமையும்.

30 ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக கூட்டம் நடத்துவது குறித்த கேள்விக்கு, என்னை பொருத்தவரை ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். எனக்கு பின்னால் மக்கள் இல்லை என்று சொல்வது சரியல்ல, அதை மக்களை பார்த்துக்கொள்வார்கள். மூன்று முறை வாக்கே கேட்காமல் என்னை மக்கள் வெற்றி பெற வைத்திருக்கின்றனர். நான் என்று ஒருவர் நினைத்தால், ஆண்டவன் தான் என்று காட்டுவான் எனவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+