அரசு வேலை கனவு.. ஒரே நேரத்தில் இரட்டை சகோதரிகளுக்கு நடந்த இன்ப அதிர்ச்சி.. மாநிலமே கொண்டாடுது
கோவை: அரசு வேலையில் சேர வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. ஒரு குடும்பத்தில் ஒருவர் அரசு வேலையில் சேருவது எளிதில் சாத்தியமில்லை. அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். இருவர் அரசு வேலையில் சேர வேண்டும் என்றால் அது மிக அபூர்வமாகவே பார்க்கப்படுகிறது. ஆனாலும் ஐபிஎஸ், ஐஏஎஸ் என பொறுப்புகளில் ஒரே குடும்பத்தினர் உள்ளார்கள். கேரளாவில் சுவாரஸ்யமான நிகழ்வு நடந்துள்ளது. இரட்டை சகோதரிகள் ஒரே நேரத்தில் அரசு வேலை பெற்று அசத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் லட்சக்கணக்கனோர் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி அரசு ஊழியராக போராடுகிறார்கள். ஒரு முறை அரசு ஊழியராக மாறிவிட்டால் அந்த குடும்பத்தின் சமூக அந்தஸ்து உயர்ந்துவிடும். அவர்களின் அடுத்தடுத்த தலைமுறை பெரிய செல்வந்தர் ஆக வாய்ப்பு உள்ளது. நல்ல கல்வி, நல்ல சம்பளம், நல்ல வாழ்க்கை தரம், சமூகத்தில் பெரிய மதிப்பு உயர்ந்துவிடும்.

தூய்மை பணியாளர் கலெக்டர் ஆகிறார் என்றால், தூய்மை பணியாளர் என்ற அடைமொழி மாறி, கலெக்டரின் மகள்களுக்கு கலெக்டரின் மகள் என்ற அடையாளம் வந்துவிடும். அரசு வேலை என்பது வெறும் பணம் சம்பாதிப்பது என்பதை தாண்டி அடையாளத்தை மற்றும் அந்தஸ்ததை மாற்றும் விஷயமாக இருக்கிறது. இதனால் அரசு வேலைக்கு எப்போதும் மவுசு உண்டு. தமிழ்நாட்டில் மட்டுமல்ல. கேரளாவிலும் இதுதான் நிலை. கேரளாவில் சுவாரஸ்யமான நிகழ்வு நடந்துள்ளது. இரட்டை சகோதரிகள் ஒரே நேரத்தில் அரசு வேலை கிடைத்துள்ளது.
கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடக்கரா அடுத்த சுங்கத்தாரா அருகே மணாலி பகுதியில் வசிப்பவர் பாபு. இவரது மனைவி சிந்து. இவர்களுக்கு ட்வின்ஸ் உள்ளனர். இவர்களது மகள்கள் அஞ்சனா (வயது 30), அர்ச்சனா (30) ஆகிய இரட்டை சகோதரிகள் ஆவர். இதில் அஞ்சனா அறிவியல் பாடம் எடுத்து எம்.எஸ்சி., எம்.எல்.டி. படித்துள்ளார். அர்ச்சனா, என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார்
தொடர்ந்து 2 பேரும் கேரளாவில் அரசு வேலையில் சேரும் கனவுடன் கேரளம் பொதுசேவை ஆணைய தேர்வுக்கு (பி.எஸ்.சி.) கஷ்டப்பட்டு படித்து தயாராகி வந்தார்கள். அதன்படி சமீபத்தில் நடந்த தேர்வை எழுதினர். இதைத்தொடர்ந்து வெளியான தேர்வு முடிவில் அவர்கள் தேர்ச்சி பெற்று தரவரிசை பட்டியலில் இடம்பிடித்தனர்.
இந்தநிலையில் அவர்கள் அரசு வேலையில் நியமிக்கப்பட்டு பணி ஆணையைப் பெற்றுள்ளார்கள். அதன்படி அஞ்சனா கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரியில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுனராக நியமிக்கப்பட்டுள்ளார். அர்ச்சனா, திரூரில் உள்ள சப்ளை-கோ கிடங்கில் உதவி விற்பனையாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனால் இரட்டை சகோதரிகள் மற்றும் அவரது பெற்றோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பிறப்பு, வளர்தல், பள்ளிப்பருவம், கல்லூரி படிப்பு என வாழ்க்கையில் சேர்ந்து பயணித்த இரட்டை சகோதரிகள் அரசு தேர்வுக்கும் ஒன்றாக தயாராகி எழுதி தேர்ச்சியடைந்து தற்போது வேலையையும் பெற்றது கேரளாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நீங்கள் தமிழ்நாட்டில் இப்படி ஒரே குடும்பத்தில் இரண்டு பேர் அரசு வேலையில் ஒரே நாளில் பணியில் சேர்ந்தது தெரிந்து இருந்தால் கமெண்டில் கூறுங்கள்.
-
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
"Make Kerala Great Again.." கேரளாவில் வீதி வீதியாக வாக்கு கேட்கும் டிரம்ப்.. டிரெண்டாகும் வீடியோ -
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா














Click it and Unblock the Notifications