நைட் நேரம்.. ஜன்னலை திறந்து.. பெட்ரூம்களை எட்டி பார்த்து.. அதிர வைக்கும் நபர்.. ஷாக்கில் துடியலூர்
படுக்கை அறை ஜன்னலை எட்டி பார்க்கும் நபரை போலீசார் தேடி வருகிறார்கள்
கோவை: நைட் ஆகிவிட்டால், வீடுகளில் உள்ள ஜன்னல் வழியே... பெட்ரூம்களை எட்டி பார்ப்பதுதான் இவர் வேலை.. யார் என்று தெரியவில்லை.. படுக்கை அறையை மட்டும் டார்கெட் செய்து வரும் இந்த நபரை பார்த்து பயந்து நடுங்கி கொண்டிருக்கிறார்கள் துடியலூர் மக்கள்!
ஊர் அடங்கிய பிறகு மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு 10.30 மணிக்கு மேல் பைக்கில் அந்த நபர் வருகிறார்.. வயது 30 இருக்கும்... நைட் நேரம் குளிரும் என்பதால் ஜெர்கினை போட்டு கொண்டுள்ளார்.
பைக்கை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, செருப்பையும் ஜெர்கினையும் கழட்டி பைக்கில் வைத்துவிடுகிறார்.. பிறகு மெதுவாக அக்கம் பக்கம் நோட்டம் போட்டுக் கொண்டே ஒரு சுவர் ஏறி குதிக்கிறார்.

பைக்
ஒரு வீட்டின் அருகே போகிறார்.. அங்கிருக்கும் பெட்ரூம் ஜன்னல் வழியே எட்டிப்பார்க்கிறார்.. திரும்பவும் அக்கம் பக்கம் சுற்றி பார்த்துவிட்டு, மீண்டும் பெட்ரூமையே உற்று பார்க்கிறார்.. இப்படியே பல வீடுகளின் ஜன்னல் வழியே பெட்ரூமை மட்டுமே பார்க்கிறார்.. அதன்பிறகு பைக்கை எடுத்து கொண்டு கிளம்பி விடுகிறார்..

நடமாட்டம்
இப்படிதான் அந்த சிசிடிவி காட்சி உள்ளது... கோவை துடியலூரை சுற்றி உள்ள, பூம்புகார் நகர், குறிஞ்சி நகர், முல்லை நகர், கவுண்டம்பாளையம் பகுதிகளில் இந்த நபரின் நடமாட்டம் உள்ளது.. 3 பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமிராவை ஆராய்ந்தால், இந்த நபர்தான் அதிலும் உள்ளார்.

படுக்கை அறை
வெறும் பெட்ரூம்களை பார்த்துவிட்டு செல்லும் இவர், எந்த பொருளையும் திருடவில்லையாம்.. இது அந்த பகுதி மக்களுக்கு மேலும் கிலியை உண்டு பண்ணிஉள்ளது.. ஏன் வரவேண்டும், ஏன் பெட்ரூமை எட்டி பார்க்க வேண்டும்? இவர் நோக்கம் என்ன வென்று தெரியவில்லை என்கிறார்கள்.

யார் இவர்?
துடியலூர் போலீசார் இது சம்பந்தமான விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.. பைக் நம்பரை வைத்துதான் இந்த நபரை பிடிக்க முயல்வதாக சொல்கிறார்கள்.. இவர் ஒருவேளை மனநலம் பாதிக்கப்பட்டவராக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வெறும் படுக்கை அறையை ஒரு நபர் எட்டி எட்டி பார்த்து வருவது துடியலூர் மக்களுக்கு அச்சத்தை உண்டுபண்ணி உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications