கோவையில்.. யார்னே தெரியலை.. ராத்திரி ஆயிருச்சுன்னா.. அரை நிர்வாண கோலத்தில்.. யார் அந்த மூவர்?
ஆயுதங்களுடன் சுற்றி திரியும் மர்மநபர்களால் பீதி ஏற்பட்டுள்ளது
கோவை: யாரென்றே தெரியவில்லை.. ராத்திரி நேரமாயிடுச்சுன்னா, அரை நிர்வாண கோலத்தில் 3 பேர் கோயமுத்தூரை சுற்றி சுற்றி வருகிறார்களாம்.. அவர்கள் கையில் கத்தி, அரிவாள் இருக்கிறதாம்.. இது சம்பந்தமான சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளன.
Recommended Video
கோவை இருகூர் தீபம் நகர் பகுதியில், போலீசார் வழக்கம்போல் அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.. அப்போதுதான் மர்மநபர்களின் நடமாட்டம் அதில் பதிவாகி இருந்தது... வெறும் வேட்டிபோல ஒரு துணியை இடுப்பில் கட்டி கொண்டுள்ளனர்.. கண்கள் தவிர முகத்தை மொத்தமாக இன்னொரு துணியால் மூடிவிட்டனர்.

கையில் அரிவாள், கத்தியை எடுத்து கொண்டு, நள்ளிரவு நேரத்தில் 3 பேர் நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே மர்மநபர்கள் அந்த பகுதியில் நடமாடுவதை ஒருசிலர் பார்த்துள்ளனர்.. இப்போது சிசிடிவியில் பதிவாகி இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கையில் அரிவாளை எடுத்து கொண்டு அரை நிர்வாண கோலத்தில் இவர்கள் எங்கே போகிறார்கள் என தெரியவில்லை.. மேலாடை இல்லாமல் சுற்றி வந்த நபர்கள் யார் என்றும் தெரியவில்லை.. ஆனால் எல்லா வீடுகளையும் நோட்டமிட்டுக் கொண்டே செல்கிறார்கள். இந்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் சிங்காநல்லூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பகுதியில் போலீசார் விசாரித்து கொண்டிருக்கும்போதே, அதே கும்பல் பீளமேடு குருகார்டன் பகுதியில் சுற்றி திரிந்துள்ளது.. இந்த காட்சியும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது.. ஏன் இப்படி ஏரியா விட்டு ஏரியா சென்று கொண்டிருக்கிறார்கள் என தெரியவில்லை.
இப்படித்தான் சிங்காநல்லூர் பகுதியில் 5 மாசத்துக்கு முன்பு ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல் சந்தன மரங்களை வெட்டி கடத்தியது.. போலீசாரும் அது சம்பந்தமாக சிலரை கைது செய்திருந்தனர்.. ஒருவேளை அந்த கும்பல் சம்பந்தப்பட்டவர்கள்தான் இவர்களா? அல்லது வேறு கும்பலா என தெரியவில்லை... போலீசார் கண்டுபிடித்து வருகிறார்கள்!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications