பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக -பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகள் தனித்துகளம் காண்கிறார்கள். கோவை மாவட்டத்தில் திமுக சார்பில் செந்தில் பாலாஜி களம் காண்கிறார். பாஜகவின் செயல்பாடுகளை விமர்சித்தும், விசிக திருமாவளவனை பாராட்டியும் வால்பாறை அதிமுக வேட்பாளர் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் டி. லட்சுமண சிங், திமுக சார்பில் சுதாகர் குட்டி, தவெக சார்பில் ஶ்ரீதரன், நாம் தமிழர் சார்பில் உமா தேவி ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். லட்சுமண சிங் பள்ளி தாளளராகவும், அதிமுக மாவட்ட அமைப்பாளராகவும் இருக்கிறார். சுதாகர் திமுக நகர செயலாளராக இருக்கிறார்.

பாஜகவுக்கு சப்போர்ட் இல்லை
தவெக ஶ்ரீதரன் அதிமுகவில் இருந்து தவெக வந்தவர். இவர் கடந்த 1991 வால்பாறை எம்எல்ஏவாக இருந்தார். நாம் தமிழர் கட்சியும் களத்தில் வேகம் காட்ட தொடங்கியுள்ளனர். இதனால் களத்தில் போட்டி கடுமையாக உள்ளது. வால்பாறை மலைப் பகுதி, சமவெளிப் பகுதி இரண்டு பகுதிகளில் பிரச்சாரம் அனல் பறக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் அவர், "நான் சர்ச் சென்று திரும்பியபோது, அமைச்சர் அழைத்து பேசினார். அப்போதே எனக்கு வால்பாறையில் சீட் உறுதி செய்துவிட்டார்கள். பாஜகவுக்கு சப்போர்டே இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி இல்லை. எங்கள் கோரிக்கையை எடப்பாடி ஏற்று கொண்டார்.
திருமாவளவன் ஓகே
ஆனால் மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை. இப்போது நாங்கள் தனித்து நின்றால் எங்களுக்கு வாக்களிப்பார்களா. கிறிஸ்துவர்கள் பொதுவாக பாஜகவுக்கு சப்போர்ட் செய்ய மாட்டார்கள். வாஜ்பாய் இருக்கும்போது ஓரளவுக்கு சரியாக இருந்தது. மோடி புத்தாண்டு தினம் சர்ச் போய் நிற்கிறார். இப்போது இந்தியா முழுவதும் ஆட்சியை பிடிப்பதற்காக இந்து என்று செல்கிறார்கள்.
விடுதலை சிறுத்தைகள் என்று ஒரு கட்சி இருக்கிறது. ஏழை மக்களுக்கு திருமாவளவன் கேட்கிறார் என்பதற்காக தானே அடக்கி வாசிக்கிறார்கள். யாராவது ஒரு கேட்க வேண்டுமல்லவா. நாடாளுமன்றத்தில் அவர் கேட்கிறார். எங்கு இருந்தாலும் நமக்கு என்று ஒருவர் கேட்டால் தான் எல்லாமே கிடைக்கும்" என்று கூறியுள்ளார். இந்த ஆடியோ வால்பாறை தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications