"வெளிநாட்டில் படித்தவராம்".. கொஞ்சம் கூட பொருத்தமில்லாதவர்.. பிடிஆரை விமர்சித்த வானதி சீனிவாசன்
கோவை: தமிழக நிதியமைச்சர் பொறுப்புக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சற்றும் பொருத்தமில்லாதவர் என பாஜக மகளிரணி தலைவியும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி ஸ்ரீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Recommended Video
மத்திய அரசு திட்டங்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி கோவை தெற்கு தொகுதி சட்டசபை உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த முகாமில் பெரிய கடை வீதியில் பணிபுரியும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் மத்திய அரசின் திட்டங்களில் பதிவு செய்வதற்காக விழாவுக்கு வருகை தந்தனர்.

இலவசம்
அவர்களுக்கு இலவசமாக பதிவு செய்து அடையாள அட்டைகள் தரப்பட்டன. இந்த நிகழ்வுக்கு அந்த தொகுதியின் எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் வருகை தந்தார். அவர் பேசுகையில் பிரதமர் மோடி , மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

ரூ 5 லட்சம்
அதில் 5 லட்சம் ரூபாய்க்கான ஆயுஷ் மான் பாரத காப்பீடு திட்டம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டால் ஒரு லட்சம் நிதியுதவி, உயிரிழப்பு ஏற்பட்டால் அவரது குடும்பத்தினருக்கு ரூ 2 லட்சம் நிதியுதவி வழங்கும் இ ஷாரம் திட்டம் ஆகியன முக்கியமானவை.

மக்கள்தொகை
2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணைத்துக் கொள்ள தகுதியானவர்கள். அந்த அடிப்படையில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மற்றும் இ ஷாரம் திட்டத்தில் பதிவு செய்தவற்கான இலவச முகாமில் மக்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த திட்டத்தை மாநில தொழிலாளர் நலத் துறை சார்பில் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.

அதிக அளவு தொழிலாளர்கள்
அதிக அளவு தொழிலாளர்களை கொண்ட தமிழகத்தில் இந்த திட்டம் குறித்து முகாம்கள் நடத்தி அமைப்பு சாரா தொழிலாளர்களை இந்த திட்டத்தில் இலவசமாக பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்துதான் சட்டசபையில் பேசிய போது குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே தற்போது இந்த திட்டத்தில் பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக அரசு
தமிழக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. மத்திய அரசின் நலத் திட்டங்களை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். எந்த ஒரு ஆக்கப்பூர்வமான விமர்சனம் வைத்தாலும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அந்த பொறுப்புக்கு சற்றும் பொருத்தமில்லாமல் கீழ்த்தரமான விமர்சனங்களை வைக்கிறார்.

வெளிநாடு
தான் வெளிநாட்டில் படித்தவர், மத்திய அரசு அறிவுரை கூற என்ன நோபல் பரிசா வாங்கினார்கள் என அவர் கேட்கிறார். இதற்கெல்லாம் முதல்வர் ஸ்டாலின்தான் பதில் கூற வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல் அவர் சொல்வது குறித்து நாங்கள் கவலைப்படுவதில்லை என்றும் விளக்கமளித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications