தமிழ்நாட்டில் மோடியின் ஆட்டம் ஆரம்பம்! கோவையில் முளைத்த போஸ்டர்கள்.. வானதி சீனிவாசன் கூல் விளக்கம்
கோவை: பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் கோவை பாஜக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது உள்ளிட்ட 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டம், கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து வானதி சீனிவாசன் முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

வானதி சீனிவாசன்
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், "நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.. வரும் ஆகஸ்ட் 15இல் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் கூட மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

விதிமுறைகள்
அதன்படி எல்லா வகையான துணிகளிலும் தேசியக் கொடியைத் தயாரிக்கலாம். மேலும், மாலை 6 மணிக்கு பிறகும் கூட நாம் தேசியக் கொடியைப் பறக்க விடலாம். அதேநேரம் தேசியக்கொடி ஏற்றும் கம்பங்களின் மேலே எந்தவொரு சின்னமும் இருக்கக் கூடாது. இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு யார் வேண்டுமானாலும் தேசியக் கொடியை ஏற்றலாம். அரசின் ஜெம் வெப்சைட்டில் மூலம் 2 கோடி தேசியக் கொடிகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு உள்ளது.

கொடிகள்
கோவையில் பாஜக சார்பில் தேசியக்கொடி ஏற்ற தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. எனது சட்டசபை அலுவலகத்திலும் கொடி வழங்க உள்ளேன். பொதுமக்கள் தங்கள் விரும்பும் பணத்தைச் செலுத்தி தேசியக் கொடியைப் பெற்றுக் கொள்ளலாம். பாஜக சார்பில் தமிழ்நாடு முழுக்க சுமார் ஒரு கோடி தேசியக் கொடிகளை ஏற்ற ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆண்கள் சார்பில் இரு சக்கர வாகன பேரணியும் பெண்கள் சார்பில் வந்தே மாதரம் பேரணியும் நடத்தத் திட்டமிட்டு வருகிறோம்.

எந்த கொடிக்கம்பத்தில் வேண்டுமானாலும்
கோவில்கள் கல்வி நிறுவனங்களிலும் தேசியக் கொடியை ஏற்றலாம். திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிக் கொடிக் கம்பங்களிலும் கூட மேலே கூறப்பட்டுள்ள சட்ட திருத்தங்கலை பின்பற்றி தேசியக் கொடியை ஏற்றலாம். கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்து நானும் ஒவ்வொரு முறையும் கேட்கிறேன். ஆனால் கோவை பொறுப்பு அமைச்சர் ஒவ்வொரு முறையும் கோவைக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகச் சொல்கிறார்.

கோவை ஸ்மார்ட் சிட்டி
அந்த பணம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. கவுண்டமணி செந்தில் வாழைப்பழ காமெடி போல இந்த 200 கோடி ரூபாய் உள்ளது. இதில் எவ்வித முன்னெற்றமும் இல்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஏன் தான் திமுகவுக்கு வாக்களித்தோம் என்ற மனநிலைக்குக் கோவை மக்கள் ஏற்கனவே வந்துவிட்டனர்" என்றார். மேலும், கோவையில் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் "தமிழ்நாட்டில் தலைவரின் ஆட்டம் ஆரம்பம்" என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அவர், "இதில் என்ன தவறு?" என்று பதில் அளித்தார்.

அட்டுக்கல் பிரச்சினை
தொடர்ந்து அட்டுக்கல் பிரச்சினை குறித்துப் பேசிய அவர், "அட்டுக்கல்லில் ஆதரவற்றவர்களுக்காக இல்லம் எனக் கூறிக் கொண்டு நல்ல மனநிலையில் உள்ளவர்களையும் பிடித்து மொட்டை கடித்து சட்டவிரோதமாக அடைத்து வைத்து இருந்தனர். ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட அந்த கட்டிடத்தைத் திறக்க திமுக நிர்வாகிகள் தான் உதவி உள்ளனர் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்படும் நடவடிக்கை இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications