கூட்டணி பற்றி வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! “எல்லாம் முடிஞ்சு போச்சு”.. தேசிய தலைமை முடிவு இதானா?
கோவை: அதிமுக - பாஜக கூட்டணி நீடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், அதிமுக பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு தடாலடியாக பதில் கூறியுள்ளார் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்பிறகு இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். அவரை பாஜகவினர் விமான நிலையத்திற்கு வந்து வழியனுப்பி வைத்தனர். இந்நிகழ்வில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசனும் கலந்துகொண்டு நிர்மலா சீதாராமனை வழியனுப்பி வைத்தார்.

பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், "நேற்று ஒரு லட்சம் வங்கி கணக்குகளுக்கு 3749 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்றார். அதில் முத்ரா திட்டம், ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் என பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கோவையின் வேகமான வளர்ச்சிக்கு இந்த கடனுதவி திட்டம் உறுதுணையாக இருக்கும். தமிழகத்தில் முதல்முறையாக இந்த மாபெரும் கடனுதவி நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. நேற்றைய நிகழ்வில் ஒருவர் கடன் கிடைக்க வில்லை என சொன்னார், அவரது கோரிக்கையும் கேட்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.
அதிமுக எம்.எல்.ஏக்கள், நிர்மலா சீதாராமனை சந்தித்தது குறித்த கேள்விக்கு "அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் முழுக்க முழுக்க தொகுதி பிரச்சனைகளுக்காக நிதி அமைச்சரை சந்தித்தனர். இது அரசு நிகழ்வு என்பதால் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு முன்பும் இதேபோல் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் டெல்லிக்கு வந்து மத்திய அமைச்சரை சந்தித்து தென்னை பிரச்சனை குறித்து பேசி இருக்கின்றனர்." என பதில் அளித்தார்.
மேலும் பேசிய வானதி சீனிவாசன், "கூட்டணி பேச்சுவார்த்தை அனைத்தையும் நாங்கள் ஏற்கனவே சொன்னது போல தேசிய தலைமை முடிவு செய்யும். நேற்று சென்னையில் கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றதா என்பது குறித்து தெரியவில்லை. நான் நேற்று முழுக்க நான் போனையே எடுக்க முடியவில்லை. மாநிலத் தலைவர் இல்லாமல் அமைப்பு செயலாளர் தலைமையில் கோட்டத் தலைவர்கள் கூட்டம் நடத்தலாம்" எனத் தெரிவித்தார்.
அப்போது அதிமுக உடனான கூட்டணி குறித்து பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு, "எல்லாம் முடிஞ்சு போச்சு" என பதில் அளித்துவிட்டுச் சென்றார். திமுக பாஜக இடையே கூட்டணி நீடிக்கும், அதற்குத்தான் பெரியவர்கள் பேசி வருகிறார்கள் என பாஜக துணைத் தலைவர் வி பி துரைசாமி நேற்று கூறி இருந்த நிலையில் எல்லாம் முடிஞ்சு போச்சு என கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவரும் எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் கூறி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணி முறிவு பற்றியும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய தலைமைக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. நிர்மலா சீதாராமன் அண்ணாமலையுடனும் ஆலோசனை நடத்தினார். பின்னர் தான் கோவை வந்தார் நிர்மலா சீதாராமன். அவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற வானதி சீனிவாசன், அதிமுக உடனான கூட்டணி பற்றி இவ்வாறு கூறியுள்ளது அரசியல் அரங்கில் விவாதங்களைக் கிளப்பிவிட்டுள்ளது.
-
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
சமாதானமாகும் அண்ணாமலை?.. பேட்மிண்டன் மைதானத்துக்கே தேடிப்போன மத்திய அமைச்சர்! பின்னணி -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு












Click it and Unblock the Notifications