வானதி சீனிவாசனின் "தக்காளி சட்னி".. பாஜகவின் மத அரசியல் கேள்விக்கு நச் பதில்.. கிறுகிறுத்து போன கோவை

தக்காளி சட்னியை உதாரணம் சொல்லி பேட்டி தந்துள்ளார் வானதி சீனிவாசன்

Subscribe to Oneindia Tamil

கோவை: ஒரு கேள்வி கேட்டால், கேள்வி கேட்டவர்களையே அசரடிப்பது போல் பதிலை சொல்லி திணறடிப்பார் பாஜகவின் சீனியர் தலைவர் வானதி சீனிவாசன்.. அந்த வகையில் அவர் தந்த "தக்காளி சட்னி" விளக்கம் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.

பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சொன்னதாவது:

"பொள்ளாச்சி பகுதியில் தென்னை நார் தொழிற்சாலைகள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன... கயிறு சம்பந்தமான பொருள்களை ஏற்றுமதி செய்து, அந்நிய செலாவணியை இந்த தொழிற்சாலைகள் ஈட்டித் தந்து கொண்டிருக்கின்றன.

 ஆரஞ்சு நிறம்

ஆரஞ்சு நிறம்

சிறு, குறு தொழிற்சாலைகளாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனங்கள் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வெள்ளை நிற வகைப்பாட்டில்தான் இருந்து வந்தன... ஆனால், சமீப காலமாக இவற்றை ஆரஞ்சு நிறத்துக்கு மாற்றியுள்ளனர். மக்களின் உடல்நலம், சுற்றுசூழல் இவையெல்லாம் நமக்கு முக்கியம்தான்... ஆனால், அதேசமயம் தென்னை நார் தொழிற்சாலைகளின் வளர்ச்சி தடைப்படாமல் இருக்க தமிழக அரசு உதவ வேண்டும்.,. அமைச்சர்களின் பெயரைச் சொல்லி, சிறு, குறு நிறுவனங்களிடம் இருந்து நிறைய தொகையை வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன..

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

இந்த குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கைகள் எடுத்து இந்த தொழிலை பாதுகாக்க வேண்டும். வரும் ஜனவரி 1ம் தேதி முதல் கைத்தறி ரகங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவிகிதமாக உயர்த்தப்படுவதாக ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்திருக்கிறது.. தமிழகத்தில் கைத்தறி நெசவு தொழில் அதிக அளவில் உள்ளதால், கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு தர வேண்டும்.. சமீபத்தில் குருவாயூர் சென்றிருந்தேன்..

கேரளா

கேரளா

அங்கு படுகொலை செய்யப்பட்ட 2 குடும்பத்தினரையும் சந்தித்தேன்.. கேரளாவில் மத தீவிரவாதத்தை வளர்க்கும் குழுக்களுக்கு கம்யூனிஸ்ட் அரசாங்கம் ஆதரவளித்து கொண்டிருக்கிறது.. இதன் காரணமாக அங்கு படுகொலைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பது வேதனையளிக்கிறது. அந்நிய நாட்டில் திட்டமிட்டுக்கூட இது நடத்தப்பட்டிருக்கலாம்... அதனால், இந்த வழக்கை மத்திய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும்.

 குப்பை பிரச்சனை

குப்பை பிரச்சனை

கோயம்புத்தூர் மாநகராட்சியை பொறுத்தவரை, குப்பை பிரச்சனை மோசமாகி கொண்டிருக்கிறது.. ஒவ்வொரு முறையும் தொகுதிக்கு சென்றால் குப்பை பிரச்சனையைதான் மக்கள் சொல்றாங்க.. இதுக்கு முன்னாடி வேலை செய்துட்டு இருந்தவர்கள் எல்லாம் வேலையை விட்டு போய்விட்டார்களா? அல்லது வேலைக்கு வருவதில்லையா? அல்லது ஆட்களை குறைத்துவிட்டார்களா என தெரியவில்லை.. ஆனால் குப்பைகளை எடுப்பதில்லை.. சாலைகள் இப்போது புதிதாக போட்டு தருவதாக சொல்லி இருக்காங்க.. இன்னும் ஒரு மாத காலம் பார்ப்போம்.. ரோடு எங்கியுமே போடவில்லையானால் மக்களை திரட்டி போராட்டம் செய்வதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை...

Recommended Video

    கேரளாவில் தொடர் கொலைகள்.. என்ஐஏ விசாரிக்கனும் - கோரிக்கை வைக்கும் வானதி சீனிவாசன்
     தக்காளி சட்னி

    தக்காளி சட்னி

    இதையடுத்து, "சில பாஜக தலைவர்கள், மக்கள் பிரச்சனை, பொருளாதாரம் பற்றி பேசுகிறார்கள், ஆனால் சிலர் மதம் சார்ந்து மட்டுமே பேசுகிறார்களே?" என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்... அதற்கு வானதி சீனிவாசன், "எங்க வீட்டில் எங்கம்மா இட்லிக்கு ரொம்ப நல்லா தக்காளி சட்னி பண்ணுவாங்க.. என்னுடைய அண்ணி அவங்க நல்லா பிரியாணி பண்ணுவாங்க.. அவங்களை தக்காளிச் சட்னி செய்ய சொன்னால் செய்ய வராது... ஒவ்வொருவருக்கு ஒரு திறமை இருக்கு... ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தில் வல்லுநர்களாக இருப்பார்கள்... அதனை பற்றி பேசுவதில் தவறெதுவும் இல்லையே" என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+