‘பாஷா பாய்க்கு வீர வணக்கம்’ – கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி மறைவு.. விசிக வன்னி அரசு இரங்கல்
கோவை: கோவை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட அல் உமா அமைப்பின் தலைவர் பாஷா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவு தொடர்பாக விசிக துணைப்பொதுச் செயலாளர் வன்னி அரசு, "தான் சார்ந்த முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும் உண்மையாக களமாடிய பெருந்தகை அவர். அவருக்கு விசிகவின் வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறோம்." என்று கூறியுள்ளார்.
கோவை மாநகரில் கடந்த1998 ஆம் ஆண்டு அடுத்தடுத்து 12 பகுதிகளில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 56 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் படு காயமடைந்தனர். நாட்டையே அதிரவைத்த இந்த சம்பவத்துக்கு அல் உம்மா அமைப்பு பொறுப்பேற்றிருந்தது. அந்த அமைப்பின் தலைவர் எஸ்.ஏ. பாஷா உள்ளிட்ட 13 பேருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டிருந்தது.

சுமார் 30 ஆண்டுகள் பாஷா கோவை மத்திய சிறையில் இருந்தார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்தாண்டு பாஷா பரோலில் வெளியில் வந்திருந்தார். உடல்நல பாதிப்பால் அவர் கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 84. பாஷா பரோலில் இருந்து வந்தபோதே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வன்னி அரசு அவரை நேரில் சந்தித்து உரையாடினார்.
பாஷா மறைவு குறித்து விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இரங்கல்.. அய்யகோ எங்கள் பாஷா பாய் மரணித்தாரே. 1998 ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார் அல்_உம்மா தலைவர் எஸ்.ஏ.பாஷா. 2007 ஆம் ஆண்டு பாஷா உள்ளிட்ட 13 பேருக்கு ஆயுள் சிறை வழங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை கொடுஞ்சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்.
80 வயதைக்கடந்த பாஷா கடந்த ஓராண்டுக்கும் மேலாக உடல்நலமின்றி சிறை விடுப்பில் வெளியே வந்து சிகிச்சை பெற்று வந்தார். இன்று மாலை 6 மணியளவில் சிகிச்சையிலிருந்தவாறே மரணித்தார். இச்செய்தி பெரும் வேதனையையும், வலியையும் ஏற்படுத்துகிறது. கடந்தாண்டு சிறை விடுப்பில் வந்த அய்யா பாஷா அவர்களை அவரது கோவை இல்லத்தில் சந்தித்தோம். அத்தனை ஆரவாரத்துடனும், வாஞ்சையுடனும் ஆரத்தழுவி வரவேற்றார்.
சிறையிலிருந்த எந்த வலியையும் வெளிப்படுத்தவில்லை. மாறாக,அந்த காலத்தில் நடந்த பல வீர தீர சம்பவங்களை நினைவுப்படுத்தி பெருமையோடு பேசினார். துணிச்சல் மிகுந்த போராட்டத்துக்கு சொந்தக்காரர். தான் சார்ந்த முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும் உண்மையாக களமாடிய பெருந்தகை அவர். இரு நாட்களுக்கு முன்பு என்னோடு தொலைபேசியில் உரையாடினார். 'தம்பி வன்னி அரசு உங்களோடு பேச வேண்டும் போல இருந்தது. இப்போது போத்தனூர் மகள் வீட்டிலிருக்கிறேன். வந்து போங்க' என்றார்.
பேசி ஓரிரு நாட்களுக்குள் மறைந்து போனார். நான் மட்டுமல்ல, தலைவர் திருமாவளவனும் முஸ்லிம்களுக்கு உண்மையான தலைவர் என அய்யா பாஷா எப்போதும் பெருமையோடு பேசுவார். அப்படி விடுதலைச்சிறுத்தைகளை நேசித்த அய்யா பாஷா அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்." என்று கூறியுள்ளார்.
உயிரிழந்த பாஷாவின் உடல் பூமார்க்கெட் பகுதியில் உள்ள ஹைதர்அலி திப்புசுல்தான் மசூதியில் நாளை மாலை நல்லடக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications