துணை ஜனாதிபதி கோவை விசிட் – ரெட் ஜோன்களாக அறிவிக்கப்பட்ட முக்கிய பகுதிகள்
கோவை: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கடந்த வாரம் தமிழ்நாடு வந்திருந்தார். கோவை, திருப்பூர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அவர் சென்றிருந்தார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் நாளை மீண்டும் கோவை வருகை புரியவுள்ளார். காரமடை அருகே உள்ள ஒன்னிபாளையம் கருப்பராயன் கோயில் விளக்கு பூஜையில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார். துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவையின் முக்கிய பகுதிகள் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு ரெட் ஜோனாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர், எம்பி, கவர்னர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் இருந்த சி.பி ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். பதவியேற்ற பிறகு முதல்முறையாக அவர் கடந்த வாரம் தமிழ்நாடு வந்தார். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அவருக்கு பல்வேறு இயக்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. தேவர் ஜெயந்தி விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டார். முதல்வர் மு.க. ஸ்டாலின், பாஜக நிர்வாகிகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் அவரைச் சந்தித்தனர்.

துணை ஜனாதிபதி கோவை விசிட்
சுமார் 4 நாள்கள் பயணத்திற்கு பிறகு சி.பி. ராதாகிருஷ்ணன் டெல்லி சென்றார். இந்நிலையில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் மீண்டும் கோவை வரவுள்ளார். காரமடை அருகே உள்ள ஒன்னிபாளையம் பகுதியில் எல்லை கருப்பராயன் கோயில் உள்ளது. அங்கு நாளை (நவம்பர் 4 ஆம் தே) திரு விழக்கு பூஜை நடைபெறவுள்ளது. சுமார் 10,008 பெண்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
இதில் சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார். இதற்காக வருகிற 4 ஆம் தேதி அவர் மீண்டும் கோவை வருகை தரவுள்ளார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. துணை ஜனாதிபதி நிகழ்ச்சி என்பதால் பாதுகாப்பு கருதி, காவல்துறை சாப்பில் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ரெட் ஜோன்கள்
அதேநேரத்தில் இந்த நிகழ்ச்சியில் பெண்கள் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தவறான செய்தி பரப்பப்படுகிறது என்று காவல்துறை கூறியுள்ளது. இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பும் நபர்கள் மீது கடுமையான சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். என்றும் காவல்துறை எச்சரித்தது. துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவை ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "துணை குடியரசுத் தலைவர் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகைப்புரியவுள்ளார். இதை முன்னிட்டு, பாதுகாப்பு காரணம் கருதி கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒன்னிபாளையம் கருப்பராயன் திருக்கோயில் சுற்றியுள்ள பகுதிகளான பெரியநாயக்கன்பாளையம், கோவில்பாளையம் ஆகியபகுதிகள் மற்றும் மிக முக்கிய விருந்தினர் பயணிக்கும் சாலைகள் ஆகியவை தற்காலிக சிவப்பு மண்டலப் பகுதிகளாக கொண்டு வரப்பட்டுள்ளன.
ட்ரோன்களுக்கு தடை
கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செயல்முறைகளின் படி இந்தப் பகுதி பாதுகாப்புக்குள் கொண்டு வரப்பட்டது. மேற்கண்டபகுதிகளில் 03.11.2025 காலை 8 மணிமுதல் 04.11.2025 இரவு 8 மணிவரையில் ஆளில்லா விமானங்களான ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடைசெய்யப்பட்ட காலஅளவில் தடையினை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி ஊர்திகளை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்." என்று கூறியுள்ளார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications