கோவில்ல பிஸினஸ் நடக்குது.. விஜய் போட்ட பெரிய ஆர்டர்! யாரும் தப்ப முடியாது! இசஅ அமைச்சர் ரமேஷ் உறுதி!
கோவை: கோயில்களில் இடைத்தரகர்கள் முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள், கடந்தகால முறைகேடுகள் மீது கடும் நடவடிக்கை எனவும், கோயில்களில் தரிசன வசதிகளை மேம்படுத்தவும், இடைத்தரகர்கள் மூலம் நடைபெறும் முறைகேடுகளை முற்றிலுமாக ஒழிக்கவும் அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரமேஷ், தற்போது பல கோயில்களில் பக்தர்களின் ஆன்மிகத் தேவைகளை விட வணிகச் செயல்பாடுகளே அதிக முக்கியத்துவம் பெறும் நிலை உருவாகியுள்ளது.

மன அமைதிக்காகவும் இறைவனை தரிசிப்பதற்காகவும் வரும் ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. கோயில்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த இணையவழி டோக்கன் முறை முழுமையாக மேம்படுத்தப்பட உள்ளது.
அமைச்சர் ரமேஷ்
ஒவ்வொரு கோயிலின் கொள்ளளவுக்கு ஏற்ப ஒரு மணி நேரத்திற்கு எத்தனை பேர் தரிசனம் செய்யலாம் என்பது கணக்கிடப்பட்டு, அதற்கேற்ப இணையதளம் மூலம் டோக்கன்கள் வழங்கப்படும் என்றார். முதற்கட்டமாக முக்கிய கோயில்களில் இந்தத் திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு, பின்னர் மாநிலம் முழுவதும் உள்ள அறநிலையத்துறை கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
கோயில் இடைத்தரகர்கள்
மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், ஆறு மாத கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரிசனத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும், இணைய வசதி பயன்படுத்தத் தெரியாத பொதுமக்கள் மற்றும் உள்ளூர் பக்தர்களின் நலன் கருதி கோயில்களிலேயே நேரடி டோக்கன் முன்பதிவு மையங்கள் அமைக்கப்படும். இனிமேல் இடைத்தரகர்கள் மூலம் மொத்தமாக டோக்கன்கள் முன்பதிவு செய்யும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
அறநிலையத்துறை
வாட்ஸ்அப் மூலமாகவும் டோக்கன்களை எளிதாகப் பெறும் வசதி குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும்போது, சிலருக்கு மட்டும் தரிசன அனுமதி வழங்குவதற்காக இடைத்தரகர்கள் மூலம் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கும் ஊழல் நடைமுறைகள் முழுமையாக ஒழிக்கப்படும். அதேபோல், அறநிலையத்துறை கோயில்களில் கடந்த காலங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
கோயில் தங்கம்
அன்னதானத் திட்டங்கள், உண்டியல் வசூல், கோயில் தங்கத்தை உருக்கி நிலையான வைப்பு நிதியாக மாற்றிய விவகாரங்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் 360 டிகிரி கோணத்தில் ஆய்வு செய்யப்படும். இந்த விசாரணைகளின் மூலம் வெளிச்சத்துக்கு வரும் முறைகேடுகள் அனைத்தும் பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வரப்படும். இதில் ஈடுபட்டவர்கள் எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கோயில் யானை
பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கோயில் யானைகளுக்கான புத்துணர்ச்சி முகாமை மீண்டும் நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. திருப்பரங்குன்றம் தொடர்பான விவகாரங்கள் குறித்து கட்சியின் நிலைப்பாட்டை முதலமைச்சரே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் . தாம் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டே தமிழக வெற்றி கழகம் செயல்பட்டு வருகிறது.
கோயில்களில் திடீர் ஆய்வு
அந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே கட்சியில் இணைக்கப்படுவார்கள். அரசு நீடிக்காது என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து தங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.மக்கள் நலப் பணிகளை தொடர்ந்து முன்னெடுப்போம். திருச்செந்தூரில் மேற்கொள்ளப்பட்டதுபோல் அனைத்து கோயில்களிலும் திடீர் ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும். முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது" என்றும் அவர் தெரிவித்தார்.
-
விஜய் அதிரடி.. தமிழக தனியார் பள்ளிகளுக்கு ₹3 லட்சம் அங்கீகார கட்டணம் ரத்தா? உண்மை என்ன? -
முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தமிழ்நாடு முழுக்க போன ஆர்டர்.. கிராமங்களுக்கு விடிவுகாலம்! -
வேற லெவலில் விஜய் செய்த சம்பவம்! ஒரே நேரத்தில் 300 பேருக்கு ப்ரோமோஷன்! வரலாற்றில் முதன்முறையாமே! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
அதிமுக எம்எல்ஏக்கள் ரோட்டில் நிற்கிறார்கள் தெரியுமா? தவெகவை வெளுத்த டிடிவி தினகரன்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
மாறுவேடத்தில் நள்ளிரவு ரவுண்ட்ஸ் போகிறாரா முதல்வர் விஜய்? தவெக ஆனந்த்ஜீத் உடைத்த அதிரடி ரகசியம்! -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா -
“மின்வெட்டு ஏற்படுவது உண்மைதான்.. மறைக்கவோ, மறுக்கவோ இல்லை”.. ஒப்புக்கொண்ட மின்வாரிய தலைவர் -
திருப்பரங்குன்றம் தீபம்.. தவெக அரசின் நிலைப்பாடு.. ஓபனாக பேசிய சிபிஎம்! முக்கிய டிமாண்ட்! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்











Click it and Unblock the Notifications