விஜய் வருகையால் அவிநாசி சாலையில் போக்குவரத்து இடையூறு.. போலீஸார் வழக்குப் பதிவு
கோவை: கோவையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தலைமையில் நேற்று பூத் கமிட்டி கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வருகையினை முன்னிட்டு விமான நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஆகியவை தொடர்பாக இரு வழக்குகள் பீளமேடு காவல் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 133 வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி கருத்தரங்கு கோவை மாவட்டம், குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கியது. இன்றும் இந்த பூத் கமிட்டி கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இந்த கருத்தரங்கில் வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்கான களப் பணிகள் மேற்கொள்வது குறித்தும், ஆட்சி மாற்றத்துக்கான செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், அக்கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலமாக நேற்று கோவைக்கு வந்தார். கோவை விமான நிலையத்தில் அவரை வரவேற்க ஏராளமான தொண்டர்கள், ரசிகர்கள் திரண்டனர். இதனால் விமான நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. கட்டுக்கடங்காத கூட்டத்தால் கோவை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், விமான நிலைய வளாகத்தில் கட்சிக் கொடிகள் போன்றவை பயன்படுத்தி பயணிகளுக்கு இடையூறு செய்தல், விமான நிலையத்தில் இருந்த பேரிக்கார்டுகள், டிராலிகள் உள்ளிட்ட பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை விமான நிலைய சாலையில் இருந்து அவிநாசி சாலையில் இருக்கக்கூடிய தனியார் ஹோட்டல் வரைக்கும் சாலை மார்க்கமாக சென்றபோது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜய் சாலை மார்க்கமாக சென்றபோது அவரை பின்தொடர்ந்து ஏராளமான வாகனங்களில் ரசிகர்கள், தொண்டர்கள் சென்றனர். இதில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் விபத்தும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல, கருத்தரங்கு நடைபெற்ற கல்லூரி வளாகத்திலும் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இது தவிர உதயநிதி ஸ்டாலின் வருகையினை முன்னிட்டு நடப்பட்டு இருந்த திமுக கொடியினை சேதப்படுத்தியதாகவும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காளப்பட்டி பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், நடிகர் விஜய் ரசிகர்கள் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த செல்லமுத்து மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் ஆகிய இருவர் மீதும் இரு பிரிவுகளில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தவெக தலைவர் விஜயின் காரை பின் தொடர்ந்து வந்து கார், இரண்டு சக்கர வாகனங்கள் மூலம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய 133 வாகனங்கள் மீதும் போக்குவரத்து விதிமுறைகளின் படி வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று கோவை மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
தவெக ஆட்சியில்.. ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படுமா? வன்னி அரசு விளக்கம்! -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
கள்ளச் சாராயத்தை ஒழிக்க விஜய் போட்ட மெகா பிளான்.. நேரடியாக களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா! -
"எதே ராகவா லாரன்ஸா.. அடேய் விஷால் நீயும் கட்சி ஆரம்பி" தெறிக்கும் அரசியல் மீம்ஸ்! -
விஜய் தவெகவின் ‘வெற்றி டிவி’? டெல்லியில் டிரேடுமார்க் விண்ணப்பம்! களமிறக்கப்படும் பிரம்மாண்ட திட்டம் -
“திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்”.. டிடிவி தினகரன் தாக்கு! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்











Click it and Unblock the Notifications