Vinayagar Chathurthi: விநாயகர் சிலை ஊர்வலம்.. கோவை மாநகரில் 29,31 தேதிகளில் போக்குவரத்து மாற்றம்
கோவை: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மாநகரில் 722 விநாயகர் சிலைகளும், புறநகர் பகுதிகளில் சுமார் 1,600 சிலைகள் உள்பட மொத்தம் சுமார் 2,500 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதற்காக சுமார் 2,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சிலைகளை கரைப்பதற்காக வருகிற 29 மற்றும் 31 தேதிகளில் கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "கோவை மாநகரில் வருகிற 29.08.2025 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை விநாயகர் சிலை ஊர்வலமானது மதியம் 1 மணிக்கு குனியமுத்தூர் தர்மராஜா கோயிலிருந்து புறப்பட்டு குனியமுத்தூர், பாலக்காடு ரோடு வழியாக குனியமுத்தூர் குளத்தில் கரைக்கப்படுகிறது. மேலும் 2 மணிக்கு போத்தனூர் சாரதா மில் ரோட்டில் ஆரம்பித்து சங்கம் வீதியில் ஒன்று கூடி சுந்தராபுரம் வழியாக பொள்ளாச்சி ரோட்டில் சென்று குறிச்சி குளத்தில் கரைக்க படுவதை முன்னிட்டு நேரத்திற்கு தகுந்தாற்போல் கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் : விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு 29.08.2025 அன்று காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை நகருக்குள் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் இயக்க தடை விதிக்கப்படுகிறது.
பொள்ளாச்சியிலிருந்து உக்கடம் வரும் வாகனங்கள்
பொள்ளச்சி சாலையிலிருந்து உக்கடம் நோக்கி வரும் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் எல்&டி பைபாஸ், ஈச்சனாரி சர்வீஸ் ரோடு வழியாக வந்து ஈச்சனாரி விநாயகர் கோவில் முன்பு யூடர்ன் செய்து செட்டிபாளையம் ரோடு வழியாக GD Tank, ரயில் கல்யாண மண்டபம் சந்திப்பு, போத்தனூர் கடைவீதி அடைத்து நஞ்சுண்டாபுரம் சாலை மற்றும் ராமநாதபுரம் வழியாகவும், குறிச்சி பிரிவு, ஆத்துப்பாலம் வழியாகவும் உக்கடம் வந்தடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.
பொள்ளச்சி சாலையிலிருந்து உக்கடம் நோக்கி வரும் இலகுரக வாகனங்கள் ஈச்சனாரி, எல்ஐசி காலனி தக்காளி மார்க்கெட்டில் வலது புறமாக திரும்பி சாரதாமில் ரோடு, ரயில் கல்யாணமண்டபம் சந்திப்பு, போத்தனூர் கடைவீதி அடைந்து நஞ்சுண்டாபுரம் சாலை மற்றும் ராமநாதபுரம் வழியாகவும், குறிச்சி பிரிவு, ஆத்துப்பாலம் வழியாகவும் உக்கடம் வந்தடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.
மதுக்கரை மார்க்கெட்டிலிருந்து உக்கடம் வரும் வாகனங்கள்
மதுக்கரை மார்க்கெட் ரோடு வழியாக உக்கடம் வரும் பேருந்துகள் மற்றும் இலகு ரக வாகனங்கள் காமராஜபுரம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி எல்ஐசி காலனி, தக்காளி மார்க்கெட் ரோடு வழியாக சாரதாமில் ரோடு ரயில் கல்யான மண்டபம்,போத்தலூர் கடைவீதி வழியாக நஞ்சுண்டாபுரம், ராமநாதபுரம் வழியாகவும் மற்றும் குறிச்சி பிரிவு, ஆத்துப்பாலம் வழியாக உக்கடம் செல்லலாம்.
உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி செல்லும் வாகனங்கள்
உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி செல்லும் பேருந்துகள் ஆத்துப்பாலம், குறிச்சி பிரிவில் இடது புறமாக திரும்பி போத்தனூர் சாலை, போத்தனூர் கடைவீதி, ரயில் கல்யாணமண்டபம் சந்திப்பு, செட்டிபாளையம் ரோடு, GD Tank, ஈச்சனாரி சென்று பொள்ளாச்சி ரோட்டை வந்தடைந்து செல்ல வேண்டும்.
உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி செல்லும் இலகுரக வாகனங்கள் ஆத்துப்பாலம், குறிச்சிபிரிவு, போத்தனூர் சாலை, போத்தனூர் கடைவீதி, ரயில் கல்யாணமண்டபம் சந்திப்பில் வலது புறமாக திரும்பி சாரதாமில் ரோடு வழியாக பொள்ளாச்சி ரோட்டை வந்தடைந்து செல்ல வேண்டும்.
உக்கடத்திலிருந்து பாலக்காடு சாலை செல்லும் வாகனங்கள்
உக்கடத்திலிருந்து குனியமுத்தூர் வழியாக பாலக்காடு நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் அனைத்தும் உக்கடம் பேரூர் பைபாஸ் சாலைவழியாக அசோக் நகர் ரவுண்டானா, செல்வபுரம் மேல்நிலைப்பள்ளியின் இடது புறமாக திரும்பி சிவாலயா சந்திப்பு, பேரூர், சுண்டக்காமுத்தூர் கோவைப்புதூர் ரோடு வழியாக பாலக்காடு நோக்கி செல்லலாம்.
உக்கடத்திலிருந்து குனியமுத்தூர் வழியாக பாலக்காடு நோக்கி செல்லும் இலகுரக வாகனங்கள் உக்கடம் பேரூர் பைபாஸ் சாலைவழியாக அசோக் நகர் ரவுண்டானாவில் இடது புறம் திரும்பி புட்டுவிக்கி ரோடு வழியாக சேத்துமா வாய்க்கால், ஆஸ்ரமம் பள்ளி, கோவைப்புதூர் பிரிவு வழியாக பாலக்காடு நோக்கி செல்லலாம்.
பாலக்காடு சாலையிலிருந்து உக்கடம் நோக்கி வரும் வாகனங்கள்
பாலக்காடு சாலையிலிருந்து உக்கடம் நோக்கி வரும் கனரக வாகனம் மற்றும் பேருந்துகள் பாலக்காடு ரோடு, கோவைப்புதூர் பிரிவில் இடது புறம் திரும்பி கோவைப்புதூர் ஆசிரமம் பள்ளி, புட்டுவிக்கி, சேத்துமா வாய்க்கால், சிவாலயா சந்திப்பு அடைந்து செல்வபுரம் மேல்நிலைப்பள்ளி சந்திப்பில் வலது புறம் திரும்பி அசோக்நகர் ரவுண்டானா வழியாக பேரூர் பைபாஸ் சாலை, உக்கடம் ஐந்து முனை சந்திப்பு அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
பாலக்காடு சாலையிலிருந்து உக்கடம் நோக்கிவரும் இலகுரக வாகனங்கள் கோவைப்புதூர் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கோவைப்புதூர் ஆஸ்ரமம் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி கண்ணாம்பு காளவாய் சேத்துமா சேத்துமாவாய்க்கால் செக்போஸ்ட் வலதுபுறம் திரும்பி அசோக்நகர ரவுண்டானா சந்திப்பை அடைந்து உக்கடம் பேரூர் பைபாஸ் சாலை வழியாக உக்கடம் ஐந்து முனை சந்திப்பை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
சுந்தராபுரம் சங்கம் வீதி முதல் பெரியார் சிலை, குறிச்சி பிரிவு Y Junction, பொங்காளியம்மன் கோவில், குறிச்சி பிரிவு ரவுண்டானா வரையிலான ஊர்வலப் பாதையில் எவ்வித இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனமும் சாலையின் இரண்டு பக்கமும் நிறுத்துவதற்கு அனுமதி இல்லை.
குனியமுத்தூர் சந்திப்பிலிருந்து வாகாப் பெட்ரோல் பங்க், சுண்ணாம்பு காளவாய் சந்திப்பு, குனியமுத்தூர் குளம் வரையிலான ஊர்வலப்பாதையில் எவ்வித இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனமும் சாலையின் இரண்டு பக்கமும் நிறுத்துவதற்கு அனுமதி இல்லை.
மாற்றம்
இதேபோல 31.08.2025 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு சுண்டப்பாளையம் ரோடு முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்படுவதை முன்னிட்டு நேரத்திற்கு தகுந்தாற்போல் கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு 31.08.2025 அன்று காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை நகருக்குள் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் இயக்க தடைவிதிக்கப்படுகிறது.
உக்கடம் - பேரூர் மார்க்கம்
உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து பேரூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் பேரூர் பைபாஸ் ரோடு - செல்வபுரம் சிவாலயா தியேட்டர் சந்திப்பு வழியாக பேரூர் செல்ல வேண்டும்.காந்திபுரம் மற்றும் டவுன்ஹாலில் இருந்து வைசியாள் வீதி. சலிவன் வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களும் உக்கடம் சென்று வலது புறம் திரும்பி பேரூர் பைபாஸ் ரோடு சிவாலயா தியேட்டர் சந்திப்பு வழியாக செல்வபுரம் சென்று செல்லவேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.
உக்கடம் டு திருச்சி சாலை
உக்கடம் வழியாக திருச்சி ரோடு மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் சுங்கம் பைபாஸ் வழியாக சுங்கம் சந்திப்பை அடைந்து திருச்சி சாலையில் செல்ல வேண்டும். உக்கடம் வழியாக மேட்டுப்பாளையம் சாலை மற்றும் தடாகம் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும் ஒப்பணக்கார வீதி, பைவ் கார்னர், பெரிய கடை வீதி, லங்கா கார்னர் ரயில் நிலையம் வழியாக காந்திபுரம் சென்று செல்லவேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.
தடாகம் சாலை
தடாகம் ரோட்டில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் ஜிசிடி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி பாரதி பார்க், ஹோம் சயின்ஸ் வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும். மேட்டுப்பாளையத்தில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சங்கலூர் பாலம் சந்திப்பில் இடது புறம் திரும்பி கணபதி - காந்திபுரம் வழியாக செல்லவேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.
மேட்டுப்பாளையம் சாலை
மேட்டுப்பாளையத்தில் இருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் விநாயகர் சிலை ஊர்வலம் வடகோவை மேம்பாலத்தை கடந்து சென்ட்ரல் தியேட்டரை கடந்த பிறகு வடகோவை மேம்பாலம் வழியாக காந்திபுரம் செல்ல வேண்டும். பேரூரில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து பேருந்துகள் மற்றும் வாகனங்களும் பேரூர் ரோடு, செல்வபுரம் மேல்நிலைப்பள்ளி அருகில் வலது பக்கம் திரும்பி பேரூர் புறவழி சாலை வழியாக உக்கடம் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல வேண்டும்.
பேரூர் சாலையிலிருந்து தடாகம் ரோட்டிற்கு செல்லும் வாகனங்கள் சிவாலயா சந்திப்பு, ராமமூர்த்திரோடு, பனமரத்தூர். பூசாரிபாளையம், சீரநாய்க்கன் பாளையம் சுகர்கேன் சாலை வழியாக மருதமலை சாலையை அடைந்து லாலி ரோட்டில் இடது புறமாக திரும்பி தடாகம் சாலையில் செல்லலாம். மருதமலையிலிருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் லாலி ரோட்டில் இடது புறம் திரும்பி தடாகம் ரோடு, ஜிசிடி பாரதிபார்க் ரோடு, ஹோம் சயின்ஸ் சென்று மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
அவிநாசி சாலை
அவிநாசி சாலை பழைய மேம்பாலத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் கூட்ஸ் ஷெட் ரோடு மற்றும் மரக்கடை சந்திப்பில் இடது புறம் திரும்பி NH road, Five Corner டவுன்ஹால் வழியாக உக்கடம் செல்ல வேண்டும்.
காந்திபுரத்திலிருந்து மருதமலை மார்க்கம் செல்லும் பேருந்துகள் மற்றும் இலகுரக வாகனங்கள் சிவானந்தா காலனி, ஏஆர்சி சந்திப்பு, அழகேசன் ரோடு சந்திப்பை அடைந்து அழகேசன் ரோடு வழியாக தடாகம் ரோடு, ஜிசிடி, லாலி ரோடு ரவுண்டானா சென்று மருதமலை செல்ல வேண்டும்.
31.08.2025 அன்று விநாயகர் சிலை ஊர்வல பாதைகளான ராஜவீதி, ரங்கே கவுண்டர வீதி, பெரியகடைவீதி, வைசியாள் வீதி, கருப்ப கவுண்டர் வீதி, சலீவன் வீதி, காந்திபார்க். தெலுங்கு வீதி, சுக்கிரவார்பேட்டை, தியாகி குமரன் வீதி, இடையர்வீதி, தெப்பக்குளம் மைதானம். பூமார்க்கெட்ரோடு, பால்மார்க்கெட் ரோடு, மெக்ரிக்கர் ரோடு, டி.பி.ரோடு, லைட்ஹவுஸ் மைதானம். சுப்பிரமணியம் ரோடு, வெங்கட கிருஷ்ணா ரோடு, தடாகம் ரோடு, பூசாரிபாளையம் ரோடு ஆகிய சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே ஊர்வலப்பாதையில் இருக்கும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை மேற்படி பாதையில் நிறுத்துவதை தவிர்த்து மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது." என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications