கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முஸ்லிம்களுக்கு ஒன்று என்றால்.. பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்.. அமைச்சர் வேலுமணி அதிரடி

Google Oneindia Tamil News

கோவை: முஸ்லிம்களுக்கு ஒன்று என்றால்.. பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் இங்குள்ள முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்

கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு மக்களின் ஆதரவு சிறப்பாக உள்ளதாகவும் மக்களுக்கு தேவையான திட்டங்களை அரசு உடனுக்குடன் நிறைவேற்றி வருவதகாவும் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் அதிமுக அரசு கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்..

we always support Muslims, CAA not affect Indian Muslims: minister SP Velumani

குடியுரிமை திருத்த சட்டத்தை வைத்து திமுக அரசியல் செய்வதாக குற்றம்சாட்டிய அவர், .இங்கு இருக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் இல்லை என, முதல்வர் தெளிவாக விளக்கம் அளித்திருப்பதை சுட்டிக்காட்டினார். எதிர்க்கட்சி அரசியல் செய்யும் விவாகரத்திற்கு செல்ல விரும்பவில்லை என்று கூறிய வேலுமணி ஏனென்றால் அவர்கள் அப்படித்தான் செய்வார்கள் என்றார்.

சிஏஏவுக்கு எதிராக போராடிய ஜெர்மன் மாணவர் நமது நன்றிக்குறியவர்.. ப சிதம்பரம் சரமாரி கேள்வி சிஏஏவுக்கு எதிராக போராடிய ஜெர்மன் மாணவர் நமது நன்றிக்குறியவர்.. ப சிதம்பரம் சரமாரி கேள்வி

கோவை மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நிலையல் அவர்களுக்குப் பாதிப்பு வருவதை நாங்கள் எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும்? என்று அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பினார். முஸ்லிம்களைப் பிரித்துப் பார்ப்பதில்லை என்று தெரிவித்த அவர், முஸ்லீம்களுக்கு பிரச்சினை என்றால் தங்களுக்கு பிரச்சினை வந்தது போன்றது என்றும் அவர்களுக்கு பாதிப்பு நேராமல் தமிழக அரசு பார்த்துக்கொள்ளும் என்றும் .கூறினார்.

தமிழகத்தின் 99 சதவீத கிராமங்களில் குழாய் மூலம் குடிநீர் வழங்குவது என பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் 99 விருதுகளை தமிழக அரசு பெற்றுள்ளதாகவும் பேட்டியின் போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

English summary
we never silent if muslims affected in tamil nadu: minister SP velumani
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X