கோவையில் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை.. அமைதியாக பந்த் மட்டுமே செய்கிறோம்.. தமிழிசை செளந்தரராஜன் கருத்து
கோவை: தமிழக அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், எதிர்ப்பை தெரிவிக்கவும் நடத்தப்படுவதே பந்த் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தனது உறவினர் இல்லத் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று கோவை வந்தார். அவர் வரும் வழியில் வழக்கத்தை விட தீவிரமாக பாதுகாப்பு சோதனையில் போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
தமிழிசை செல்லும் வழியான கோவை - அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை பகுதியில் சாலையோரம் கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த காரை எடுக்க நீண்ட நேரமாக யாரும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து சோதனை நடத்தினர்.

தமிழிசை செளந்தரராஜன் பேட்டி
கோவை விமான நிலையத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தாரஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எல்லா இடமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கோவை என்றாலே பரபரப்பு என்று இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும். தீவிரவாதம் எந்த வகையில் தலைதூக்கினாலும் பாரபட்சமின்றி தடுக்க வேண்டும்.

கவனம் தேவை
கோவையில் பரபரப்பான நிகழ்வுகள் இல்லாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தமிழக அரசின் கோரிக்கையினை மத்திய அரசு ஏற்று என்ஐஏ விசாரணைக்கு உத்தவிட்டுள்ளது. பாதுகாப்பிற்கு ஒரு உத்திரவாதத்தை ஏற்படுத்தும் அளவிற்கு தமிழக அரசு செயல்பட வேண்டும். கோவை சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பி இருக்கின்றது. ஏன், இப்படி நடந்தது என்பதை காவல்துறை பார்க்க வேண்டும். என்ஐஏ மட்டுமல்ல, தமிழ்நாடு காவல் துறையும், கோவை சம்பவத்தில் கவனமுடன் இருந்து இருக்க வேண்டும்.

பாஜகவின் கருத்து
கோவையில் நடந்த சம்பவம் முதலில் கார் கேஸ் சிலிண்டர் என்று மேலோட்டமாக கூறப்பட்டது. பின்னர் அது வேறு விதமாக மாறியது. ஒருத்தர் மேல கவனத்தை செலுத்தாமல் முற்றிலும் பாதுகாப்பை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும். குண்டு வெடித்ததை பாஜக சொல்லித்தான் பீதி அடையனுமா? மக்கள் எல்லோரும் தொலைக்காட்சி பார்த்து கொண்டு இருக்கின்றனர். அத்தகைய கருத்துகள் வரும் போது எச்சரிக்கையாக இருக்க வாய்ப்புள்ளது.

போராட்ட வழிமுறை
பந்த் நடத்துவது என்பது அனைத்து இயக்கங்களும் ஏற்றுக்கொள்ளும் போராட்ட வழிமுறை. இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக எதிர்ப்பை தெரிவிக்க நடத்துவது தான் பந்த். கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. கோவை அமைதியான நிலையில் கடையை அடைத்து எதிர்ப்பு தெரிவிக்கும் முறை தான் பந்த். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது தான் விருப்பம் என்று தெரிவித்தார்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications