இந்தியாவிலேயே முன்னோடி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்; ஆனாலும் பாராட்டமாட்டார்கள் - முதலமைச்சர்
கோவை: கோவையில் ரூ.663 கோடி மதிப்பிலான 768 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எந்த பேதமும் இல்லாமல், அனைத்து தொகுதிகளிலும் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக முதலமைச்சர் பெருமிதம்.
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஆட்சி இந்த திமுக ஆட்சி என தனது உரையில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ரூ.663 கோடியில் புதிய திட்டங்கள்
கோவை மாவட்டம், ஈச்சனாரி பகுதியில் ரூ.663 கோடி மதிப்பிலான 768 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதன் பின்னர் மக்களிடையே உரையாற்றிய அவர், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எந்த பேதமும் இல்லாமல், அனைத்து தொகுதிகளிலும் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக கூறினார். மேலும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஆட்சி இந்த திமுக ஆட்சி என தனது உரையில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அடக்குமுறையை மீறியவன்
தொடர்ந்து பேசிய அவர், "திமுக ஆட்சியின் கொள்கைகளும், கோட்பாடுகளும், எண்ணங்களும் சிந்தனைகளும் நிறைவேறிவிடக்கூடாது என நினைப்பவர்கள் மட்டுமே திமுக அரசை விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள். என்னையும் விமர்சிக்கிறார்கள். விமர்சனம் என்பது எனக்கு புதிதல்ல. நான் விமர்சனத்தில் வளர்ந்தவன், விமர்சனங்களால் வளர்ந்தவன் நான். எதிர்ப்பையும் அடக்குமுறைகளையும் மீறி வளர்ந்தவன் நான். யாராவது இப்படி எதிர்த்தால்தான் நான் மேன்மேலும் இப்படி உற்சாகமாக செயல்படுவேன்.

விமர்சிக்க தகுதி கிடையாது
ஆனால் அதே நேரத்தில் எதிர்ப்பதன் மூலமாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்க வேண்டும் என்று நினைத்தால் அதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். சொந்த கட்சிக்குள் நடக்கும் அதிகார போட்டியில், தங்களின் கையால் ஆகாத தனத்தை மறைப்பதற்கு இன்று அதிமுகவினர் திமுக அரசை விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு திமுகவை விமர்சிப்பதற்கு அவர்களுக்கு கிஞ்சிற்றும் தகுதி கிடையாது என்பதை அழுத்தமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

பக்க பலமாக
ஏனெனில் கடந்த ஓராண்டில் ஏராளமான திட்டங்களை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். ஓராண்டிலேயே இவ்வளவு திட்டங்கள் என்றால் ஐந்து ஆண்டுகளில் ஏராளமான திட்டங்களை எங்களால் நிறைவேற்ற முடியும். இப்படியாக தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக கொண்டு வருவதே எங்கள் லட்சியம். இது உங்களுக்கான அரசு. உரிமையோடு கோரிக்கை வையுங்கள். உண்மையோடு நிறைவேற்றித் தருகிறோம். எனவே இந்த ஆட்சிக்கு நீங்கள் என்றும் பக்க பலமாக இருக்க வேண்டும்.

எதிர்பார்ப்பு அல்ல
தொகுதியில் உள்ள 10 கோரிக்கையை பட்டியலிட்டு அனுப்ப எங்கள் கட்சி எம்.எல்.ஏக்களிடம் மட்டுமல்ல பாஜக, அதிமுக என அனைத்து எம்.எல்.ஏக்களிடமும் கூறியுள்ளேன். இந்த திட்டம் இந்தியாவிலேயே முன்னோடி திட்டம் என கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். ஆனால் அவர்கள் இத்திட்டத்திற்கு பாராட்டவில்லையே என்று நான் நினைக்க மாட்டேன். அதை எதிர்பார்த்து கடமை ஆற்றுபவன் இந்த ஸ்டாலின் அல்ல" என்று முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
பினராயி விஜயன் வீட்டில் ED ரெய்டு.. காங்கிரஸ், பாஜகவை ஒரே ட்வீட்டில் விளாசிய ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications