30 எம்ஏ ஆர்சிடி என்ற உயிர் காக்கும் கருவி உங்கள் வீட்டில் இருக்கா.. கோவை மின்வாரிய அதிகாரி விளக்கம்
கோவை: தென்மேற்கு பருவ மழை காலம் தொடங்குவதால் மின்விபத்துகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன? என்பது குறித்து மின்சார வாரியம் அறிவித்துள்ளது. வீட்டில் உள்ள மின்சாதனத்தில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால் உடனே வீட்டில் உள்ள மெயின் சுவிட்சை உலர்ந்த ரப்பர், காலணிகளை அணிந்துகொண்டு அணைத்துவிட்டு உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும். மின்சார கம்பத்திற்காக போடப்பட்டுள்ள இழுவை கம்பி மீது அல்லது மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மண்டல மின்சாரவாரிய தலைமை பொறியாளர் குப்புராணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "30 எம்.ஏ. ஆர்.சி.டி. என்ற உயிர் காக்கும் கருவியை ஒவ்வொரு வீட்டிலும் பொருத்தி மின்விபத்தில் இருந்து காக்கலாம். மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், இழுவை கம்பிகள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம்.

வீட்டில் உள்ள மின்சாதனத்தில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால் உடனே வீட்டில் உள்ள மெயின் சுவிட்சை உலர்ந்த ரப்பர், காலணிகளை அணிந்துகொண்டு அணைத்துவிட்டு உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும். மின்சார கம்பத்திற்காக போடப்பட்டுள்ள இழுவை கம்பி மீது அல்லது மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காயவைக்கும் செயலை தவிர்க்கவும்.
இடி, மின்னல் தாக்குதலின்போது மின்கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை அருகில் தஞ்சம் அடைய வேண்டாம். இடி அல்லது மின்னலின்போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டாம். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடாமலும், மிதிக்காமலும் இருக்க வேண்டும். இதுகுறித்து உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவும்.ஈரமான கைகளுடன் சுவிட்சை உபயோகப்படுத்த வேண்டாம். கால்நடைகளை மின்கம்பத்திலோ, இழுவை கம்பிகளிலோ கட்டக்கூடாது.
புதிய கட்டிடங்களில் வேலை செய்யும்போது அருகில் செல்லும் மின்கம்பிகளை கவனத்தில் கொண்டு தகுந்த பாதுகாப்புடன் வேலை மேற்கொள்ள வேண்டும். கேபிள் டி.வி. வயர்களை மின்பாதைகளின் குறுக்கே எடுத்துச்செல்லக்கூடாது. மழை பெய்யும்போது கேபிள் வயர்களை தொடக்கூடாது. மெயின் சுவிட்சை அணைத்த பின்னர்தான் மின்சாதனங்களில் உள்ள பழுதை சரி செய்ய வேண்டும். உலோக பொருட்களை மின் கம்பிகளுக்கு அருகில் எடுத்துச்செல்ல வேண்டாம். நிலத்தடி மின்பாதைகள் செல்லும் இடத்தில் நிலத்தினை துளையிடுதல் அல்லது நிலத்தை தோண்டுவதை தவிர்த்தல் வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications