Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவையில் மளிகைக் கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்.. அவமானமாக நினைத்த அங்கம்மாள்.. ஆடிப்போக வைத்த முடிவு

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே கலிக்கநாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி அங்கம்மாள் அந்த பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார் இவரது கடையில் அண்மையில் உணவு பாதுகாப்பு துறையினர் வந்து சோதனை நடத்தினார்கள். இந்த சோதனைக்கு பின்னர் மளிகைக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இதனால் விரக்தி அடைந்த அங்கம்மாள் எடுத்த முடிவு உறவினர்களையும், ஊர் மக்களையும் ஆடிப்போக வைத்துள்ளது.

சிலர் மிகவும் உணர்ச்சி வசப்படுவர்களாக இருப்பார்கள்.தங்கம் மீது யாராவது அபாண்டமாக பழி சொன்னால் அல்லது தவறுகளை கண்டுபிடித்தால்,தன்னை குற்றம்சாட்டி பேசினால், தன்னை அவமானப்படுத்தினால் தாங்கி கொள்ள முடியாமல் தவறான முடிவெடுக்கிறார்கள்.. அப்படித்தான் கோவை அங்கம்மாள் தவறான முடிவெடுத்துள்ளார்.

What did Angammal do when officials sealed a grocery store in Coimbatore

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே கலிக்கநாயக்கன் பாளையம் காந்தி வீதியில் 60 வயதாகும் அங்கம்மாள் வசித்து வந்தார். இவருக்கு ஆனந்த் என்ற மகனும், பாக்கியலட்சுமி என்ற மகளும் இருக்கிறார்கள். அங்கம்மாளின் கணவர், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அங்கம்மாள் தனது மகன் ஆனந்த், மருமகள் வசந்தியுடன் தான்வசித்து வந்தார். அங்கம்மாளின் மகள் பாக்கியலட்சுமி தென்னமநல்லூரில் கணவருடன் வசித்து வருகிறார். அங்கம்மாள் தனது வீட்டிற்கு கீழ் பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்தார்.

இந்தநிலையில் அங்கமாளி கடையில், தொண்டாமுத்தூர் போலீசார் தலைமையில் உணவு பாதுகாப்புத் துறையினர் வந்து சோதனை நடத்தினர். அப்போது கடையில் தடை செய்யப்பட்ட 224 கிராம் புகையிலை பாக்கெட்டுகள் இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்றதாக கூறி அவரது கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் மனவேதனை அடைந்த அங்கம்மாள் வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்தாராம். அவருக்கு ஆறுதல் கூறிய நிலையில். எவ்வளவோ முயன்றும் குடும்பத்தினர் சமாதானப்படுத்தியும் அங்கம்மாள் சரியாகவில்லை என கூறப்படுகிறது.

அங்கம்மாள் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்தாராம். அவர், நேற்று முன்தினம் இரவு தனது அறைக்கு தூங்க சென்ற நிலையில், நேற்று காலை அதிக நேரமாகியும் அவர் வெளியில் வரவில்லை என கூறப்படுகிறது. வழக்கமாக அதிகாலையிலேயே அங்கம்மாள் கடையை திறந்து விடுவார் என்பதால், ஆனந்த் சந்தேகம் அடைந்தார்.இதையடுத்து அம்மாவின் அறை கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு அங்கம்மாள், மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அதை பார்த்து ஆனந்த் கதறி அழுதார்.

இதுகுறித்த தகவலின் பேரில் தொண்டாமுத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை உயிரை விட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+