6 மாசத்துக்கு முன்புதான் ப்ரோமோஷன்! கடைசியாக ஒரு வாக்கிங்! கோவை டிஐஜி தற்கொலைக்கு முன் என்ன நடந்தது?
கோயம்புத்தூர்: கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை 6 மணிக்கு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு முன்னும் பின்னும் நடந்தது என்ன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்த படம் இரட்டா. இந்த படத்தில் வரும் போலீஸ் அதிகாரி, தன சக போலீஸ் அதிகாரியின் துப்பாக்கியை வாங்கி யாரும் இல்லாத அறையில் தன்னை தானே சுட்டு கொலை செய்து கொள்வார்.

அந்த தற்கொலை தொடர்பாக தீவிர விசாரணையே படத்தின் கதை. அதே பாணியில்தான் கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலையும் நடந்து உள்ளது. எப்போதும் காலையில் வாக்கிங் செல்வதை வழக்கமாக வைத்து இருக்கும் கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்றும் வாக்கிங் சென்று உள்ளார். வாக்கிங்கில் சில சக அதிகாரிகளை பார்த்து இயல்பாக பேசி இருக்கிறார். காலை 5 மணிக்கு வாக்கிங் சென்றவர் காலை 6 மணிக்கு நடைபயிற்சி முடித்து விட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
முதலில் வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு அங்கிருந்து கேம்ப் ஆபிஸ் வந்துள்ளார். அங்கே வந்த அவர், மெய் பாதுகாவலர் ரவி என்பவரின் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்துள்ளார். உங்க துப்பாக்கியை கொடுங்க என்று ரவியிடம் ஆர்டர் போட்டு உள்ளார் விஜயகுமார் .
இவர் உயர் அதிகாரி என்பதால் ரவியும் துப்பாக்கியை கொடுத்துள்ளார். ஆனால் அப்போதே அவருக்கு சந்தேகம் வந்துள்ளது. விஜயகுமார் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சில நிமிடங்கள் இங்கும் அங்கும் சென்றுள்ளார். இதையடுத்து விஜயகுமார் சில நிமிடங்கள் கழித்து தனது அறைக்கு சென்று தாழ்பாள் போட்டுள்ளார்.
அடுத்த சில நொடிகளில் உள்ளே இருந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து கதவை உடைத்துக்கொண்டு போலீசார் உள்ளே சென்று பார்த்துள்ளனர். உள்ளே தனியாக கிடந்த அவர் உடலை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு அவரின் உடலை எடுத்து சென்ற போலீசார்.. அவர் மரணம் அடைந்துவிட்டதை உறுதி செய்துள்ளனர்.
முதல் கட்ட தகவலின்படி அவர் பாயிண்ட் பிளாங்க் ரேஞ்சில் சுட்டுக்கொண்டதாக கூறியுள்ளனர். அதாவது உடலுக்கு மிக அருகில் வைத்து துப்பாக்கியால் அவர் தன்னை தானே சுட்டுக்கொண்டுள்ளார். அவரின் உடல் பெரும்பாலும் அவரின் சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போலீசார் இடையே இந்த தற்கொலை பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர் அன்பான அதிகாரி, பண்பான குணம் கொண்டவர், மக்களிடம் கனிவாக பேச கூடியவர் என்று கூறப்படுகிறது. சென்னை அண்ணா நகர் துணை ஆணையராக பதவி வகித்து வந்த இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் பதவி உயர்வு வழங்கப்பட்டது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் கோவை சரக டிஐஜியாக இவர் பதவி ஏற்றார். நேற்றிரவு கூட துணை ஆணையர் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார் விஜயகுமார். ஆனால் இன்று அதிகாலை அதிர்ச்சி தரும் விதமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவர் கடந்த 2 வருடங்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. முக்கியமாக தூக்கமின்றி இன்சோம்னியா மூலம் பாதிக்கப்பட்டு இருந்த இவர் அதற்கான மாத்திரைகளை எடுத்துக்கொண்டு இருந்துள்ளார். அதோடு போலீஸ் உயர் அதிகாரிகளிடமும் அது பற்றி தெரிவித்து இருந்துள்ளார். இவருக்கு குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கமின்றி இருந்ததாக கூறப்படுகிறது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications